சிவகார்த்திகேயனின் வளர்ச்சி ஒவ்வொரு படத்திலும் அதிகரித்து கொண்டே செல்கின்றது. விஜய் டிவியில் தொகுப்பாளராக இருந்து மெரினா படத்தின் மூலம் வெள்ளித்திரையில் அறிமுகமாகிய இவர் கடந்த ஆண்டு கமல்காசன் தயாரிப்பில் "அமரன் " எனும் படத்தில் நடித்து ரசிகர்கள் மனதை கவர்ந்தார்.
இதனை தொடர்ந்து ஏ .ஆர் முருகதாஸ் இயக்கத்தில் "மதராசி", சுதா கெங்கார இயக்கத்தில் "பராசக்தி" போன்ற படங்களில் நடித்து வருகின்றார். "பராசக்தி " படத்திற்கான படப்பிடிப்பு வேலைகள் இலங்கையில் நடைபெற்று வருகின்றது. இதற்கான பிரமாண்ட செட் அமைத்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
இந்த நிலையில் தற்போது "மதராசி" படத்திற்கான டிஜிட்டல் இன்னும் விற்கப்படவில்லை எனும் தகவல் வெளியாகியிருந்தது. இந்த நிலையில் தற்போது நெட்ப்ளிக்ஸ் நிறுவனம் 23 கோடி ரூபாய்க்கு இப் படத்தினை வேண்டுவதற்கு offer வழங்கியுள்ளதாக தெரியவந்துள்ளது.
இயக்குநருக்கு குறித்த தொகை மகிழ்ச்சியை கொடுத்திருந்தாலும் சிவகார்த்திகேயனுக்கு அதிர்ச்சியளித்துள்ளது. ஏனெனில் இவரது அமரன் படம் 66 கோடி விலை போனதாகவும் இதனால் தனது மவுஸ் குறைந்து விட்டதோ என இவர் குழப்பத்தில் இருப்பதாக தெரியவந்துள்ளது.
Listen News!