• Jan 18 2025

விகடன் சின்னத்திரை விருதுகள் விழா.. ‘சிறகடிக்க ஆசை’ சீரியலுக்கு இத்தனை விருதுகளா?

Sivalingam / 6 months ago

Advertisement

Listen News!

விகடன் சின்னத்திரை விருதுகள் சமீபத்தில் அறிவிக்கப்பட்ட நிலையில் இதில் விஜய் டிவியின் ’சிறகடிக்க ஆசை’ சீரியல் பல விருதுகளை அள்ளி உள்ளது. இந்த சீரியலின் நாயகனாக நடித்துள்ள வெற்றி வசந்தத்துக்கு பிராமசிங் டேலண்ட் ஆப் தி இயர் என்ற விருது வழங்கப்பட்டுள்ளது.

அதேபோல் விஜயா கேரக்டரில் நடிக்கும் அனிலாவுக்கு டப்பிங் குரல் கொடுத்த கல்யாணி அன்பழகனுக்கு சிறந்த டப்பிங் கலைஞர் என்ற விருது கிடைத்துள்ளது. மேலும் சிறந்த குடும்பம் என்ற விருது சிறகடிக்க ஆசை சீரியலுக்கு வழங்கப்பட்டுள்ளது. அதேபோல் சிறந்த இயக்குனர் என்ற விருது ‘சிறகடிக்க ஆசை’ சீரியல் இயக்குனர் எஸ் குமரன் அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. மேலும் சிறந்த படத்தொகுப்பாளர் விருது ’சிறகடிக்க ஆசை’ சீரியல் பட தொகுப்பாளர் சந்துரு என்பவருக்கு வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

அதேபோல் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில் நடித்த ரோசரி என்பவருக்கு சிறந்த துணை நடிகர் விருதும், சிறந்த வசனகர்த்தா விருது பாக்கியலட்சுமி தொடருக்கு வசனம் எழுதியவருக்கும் கிடைத்துள்ளது.

மேலும் சன் டிவியின் எதிர்நீச்சல் சீரியலில் சிறந்த துணை நடிகைக்கான விருதை கனிகாவும், சிறந்த இயக்குனர் விருது திருச்செல்வம் அவர்களுக்கும், சிறந்த நகைச்சுவை நடிகர் விருது விமல் குமார் என்பவருக்கும், சிறந்த தொலைக்காட்சி தொடர் என்ற விருதையும், சிறந்த ஒளிப்பதிவாளர் சந்தானத்திற்கு விருதும் கிடைத்துள்ளது. இந்த வருடத்தின் கெளரவ விருது மறைந்து மாரிமுத்துவுக்கும் கிடைத்துள்ளது.

Advertisement

Advertisement