உலக சினிமாவின் மிக உயரிய விருதாகக் கருதப்படும் ஆஸ்கர் விருதுகள் ஒவ்வோர் ஆண்டும் பல்வேறு சாதனைகளையும், புதிய வரலாறுகளையும் பதிவு செய்து வருகின்றன. அந்த வகையில், 98வது ஆஸ்கர் விருதுகளுக்கான பரிந்துரைகள் தற்போது வெளியாகியுள்ள நிலையில், இந்த ஆண்டின் மிகப் பெரிய பேசுபொருளாக ‘சின்னர்ஸ்’ (Sinners) திரைப்படம் மாறியுள்ளது.

ஆஸ்கர் விருதுகளில் அதிகப்படியான பிரிவுகளில் போட்டியிடும் திரைப்படம் என்ற சாதனையை ‘சின்னர்ஸ்’ படைத்துள்ளது. மொத்தம் 16 பிரிவுகளில் இத்திரைப்படம் நாமினேட் செய்யப்பட்டுள்ளதால், முன்னதாக 14 பிரிவுகளில் போட்டியிட்டு சாதனை படைத்த ‘ஆல் அபவுட் ஈவ்’ (1950), ‘டைட்டானிக்’ (1997) மற்றும் ‘லாலா லேண்ட்’ (2016) ஆகிய உலகப் புகழ்பெற்ற படங்களின் சாதனையை ‘சின்னர்ஸ்’ முறியடித்துள்ளது.
98வது ஆஸ்கர் விருதுகளுக்கான இறுதிச்சுற்றுக்கு (Final Nomination) தகுதி பெற்றுள்ள ‘சின்னர்ஸ்’ திரைப்படம், முக்கியமான பிரிவுகள் உட்பட பல்வேறு தொழில்நுட்ப மற்றும் கலைப் பிரிவுகளில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
அதில் குறிப்பிடத்தக்கவையாக, சிறந்த படம், சிறந்த இயக்குநர், சிறந்த நடிகர், சிறந்த துணை நடிகர், சிறந்த பாடல் மேலும் பல முக்கிய தொழில்நுட்ப பிரிவுகளில் மொத்தம் 16 ஆஸ்கர் விருதுகளுக்கு நாமினேட் செய்யப்பட்டுள்ள ‘சின்னர்ஸ்’, இந்த ஆண்டின் மிகப் பெரிய விருது வேட்பாளராக பார்க்கப்படுகிறது.
Listen News!