தமிழ் சினிமாவில் காலம் கடந்தும் ரசிகர்களால் கொண்டாடப்படும் சில படங்கள் இருக்கின்றன. அந்த பட்டியலில் முதன்மையான இடத்தை பிடிப்பது தல அஜித்தின் ‘மங்காத்தா’. இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில், 2011ஆம் ஆண்டு வெளியான இந்த படம், அஜித்தின் திரையுலக வாழ்க்கையில் மட்டுமல்லாமல், தமிழ் சினிமாவின் போக்கையே மாற்றிய ஒரு முக்கியமான படமாக அமைந்தது.

முழுக்க முழுக்க நெகட்டிவ் வேடத்தில் அஜித் நடித்த முதல் படம் என்பதோடு, “வில்லன் ஹீரோ” என்ற புதிய அடையாளத்தையும் அவர் இந்த படத்தின் மூலம் உருவாக்கினார். வெளியான நாளிலிருந்தே மங்காத்தா ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது மட்டுமல்லாமல், இன்று வரை கொண்டாடப்பட்டு வருகிறது.
ரசிகர்களின் நீண்ட நாள் கோரிக்கையை தொடர்ந்து, இன்று (23.01.2025) ‘மங்காத்தா’ திரைப்படம் மீண்டும் திரையரங்குகளில் ரீ-ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது. ரீ-ரிலீஸ் ஆன முதல் நாளிலிருந்தே, பல திரையரங்குகளில் ரசிகர்கள் பட்டாசு, பாலாபிஷேகம், பேனர், கட் அவுட் என உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர்.
14 ஆண்டுகள் கடந்துவிட்டாலும், அஜித்தின் ஸ்டைல், டயலாக்ஸ், யுவன் ஷங்கர் ராஜாவின் இசை ஆகியவை இன்னும் அதே தாக்கத்தை ஏற்படுத்துகின்றன.
‘மங்காத்தா’ படத்தில் அஜித்துடன், திரிஷா, பிரேம்ஜி, ராய் லட்சுமி, அஞ்சலி, வைபவ், ஆண்ட்ரியா, மகத் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.

இந்த நிலையில், ‘மங்காத்தா’ ரீ-ரிலீஸை திரையரங்கில் பார்த்துவிட்டு, நடிகர்கள் வைபவ் மற்றும் மகத் தெரிவித்துள்ள நெகிழ்ச்சி பேட்டி தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
அந்த பேட்டியில் அவர்கள், “பயங்கர சந்தோசமா இருக்கு… 14 ஆண்டுகள் கழித்து இப்படி நம்ம AK சாரை பெரிய திரையில் பார்ப்பதற்கு ரொம்பவே மகிழ்ச்சியா இருக்கு. பழைய நாட்கள் கண் முன்னாடி வந்த மாதிரி இருக்கு. மேலும் இப்படத்தில் நாங்களும் நடித்தோம் என்பதை நினைக்கும் போது ரொம்ப பெருமையா இருக்கு…” என்று நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளனர்.
Listen News!