• May 20 2024

குளிக்கப் போன சிம்பு 2மணி நேரமாக வரவில்லை.. மீசை ராஜேந்திரன் கூறிய சுவாரஷ்யமான சம்பவம்..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

சிம்பு நடிப்பில் சமீபத்தில் 'பத்து தல' திரைப்படம் வெளியாகி ரசிகர்களிடம் கலவையான விமர்சனங்களைப் பெற்று வருகின்றது. இந்நிலையில் சினிமாவில் காமெடி, வில்லன் உள்ளிட்ட காட்சிகளில் துணைவேடங்களில் நடித்த மீசை ராஜேந்திரன் சமீபத்தில் சிம்பு பற்றிக் கூறிய விடயமானது சமூக வலைத்தளங்களில் படு வைரலாகி வருகின்றது. 


அதாவது நேர்காணல் அவரிடம் சிம்புவை சுற்றி வரும் சர்ச்சைகள் குறித்து கேள்வியெழுப்பினார். இதற்கு பதிலளிக்கையில் "லிட்டில் சூப்பர் ஸ்டார், எஸ்.டி.ஆர். உட்பட 4 பட்டங்கள் சின்ன வயதிலேயே நடிகர் சிலம்பரசனுக்கு கிடைத்து விட்டது. அவரின் 20 வது வயதில் தான் காதல் அழிவதில்லை படத்தில் தான் ஹீரோவாக அறிமுகமானார் என நினைக்கிறேன். இப்ப கிட்டதட்ட 50 படங்கள் நெருங்கி விட்டார்" என்றார்.


மேலும் "பொதுவாக திறமை இருப்பவர்கள் திரும்ப வருவார்கள். அந்த வகையில் எல்லா விஷயத்திலும் சிம்பு திறமையான ஆளு. நான் அவருடன் 3 படங்களில் பணியாற்றியுள்ளேன். வல்லவன், காளை, ஒஸ்தி ஆகிய 3 படங்கள் தான் அவை. நான் அவருடைய குத்து படத்தின் ஷூட்டிங்கை பார்த்துள்ளேன். எஸ்.ஆர்.எம் கல்லூரியில் நடந்த ஷூட்டிங்கில் மழையில் ஹீரோ, ஹீரோயின் பேசும் காட்சி படமாக்கப்பட்டது. 

அந்த காட்சி முடிந்ததும் நான் வீட்டுக்கு சென்று குளித்து விட்டு வருகிறேன் என சொல்லி சென்றார். அவரால் அந்த படக்குழுவினர் 2 மணி நேரம் காத்திருந்தது. அப்ப அவர் பக்குவப்படவில்லை. இப்போது சிம்பு பக்குப்பட்டு விட்டார்" என்றார். 


அதுமட்டுமல்லாது "வல்லவன் படத்தை சிம்பு தான் இயக்கினார். நான் போலீஸாக நடித்தேன். சிம்பு என்னிடம் காட்சியை சொன்னார். நான் அவரை அடிக்க வேண்டுமென சொன்னார். நான் எப்படி உங்களை அடிக்க முடியும் என கேட்டேன். உடனே காட்சிக்கு தேவையானவற்றை ரெடி பண்ணிக் கொடுத்து அவர் என்னை நடிக்க சொன்னார்.  

அந்த காட்சி மிகவும் இயற்கையாக வந்தது. என்னைப் பொறுத்தவரை சிறந்த இயக்குநர்கள் என்றால் முதலிடத்தில் பாலாவும், இரண்டாவது இடத்தில் மலையாள இயக்குநர் ஜோஷியும், அதற்கடுத்த இடத்தில் சிம்பு தான் என நான் சொல்வேன். அவர் இயக்குநரானால் சினிமாவில் மிகப்பெரிய அளவில் வருவார்" எனவும் கூறியுள்ளார் மீசை ராஜேந்திரன்.

Advertisement

Advertisement