• Jun 29 2024

அது நமக்குத் தானா நம்பவே முடியலையே என்று மரத்துக்கு பின்னாடி போய் நின்று சிரித்தேன்- விடுதலை பட காதல் பாடல் குறித்து பேசிய சூரி

stella / 1 year ago

Advertisement

Listen News!


பிரபல இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில், 'அசுரன்' படத்தின் வெற்றிக்கு பின்னர், வெளியாகி உள்ள திரைப்படம் 'விடுதலை'. இந்த படத்தில் நடிகர் சூரி கதையின் நாயகனாக நடித்துள்ளார். விஜய் சேதுபதி பெருமாள் வாத்தியார் என்கிற மக்கள் போராளியாக மிக முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். தன்னுடைய உரிமைக்காக போராடும் மக்கள் பற்றிய கருத்தை மையமாக வைத்தே இப்படமும் வெளியாகியுள்ளது.

துணைவன் என்கிற சிறுகதையை தழுவி எடுக்கப்பட்டுள்ள இப்படம், வெளியானது முதலே தொடர்ந்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. கடந்த வெள்ளிக்கிழமையன்று வெளியான இப்படம், பாசிட்டிவ் விமர்சனங்களை பெற்று வருவதால், அனைத்து திரையரங்குகளிலும்ஃஹவுஸ் ஃபுல்லாக ஓடி வருகிறது. 


திரைப்படத்திற்கு கிடைத்து வரும் மிகப்பெரிய வரவேற்பால் விடுதலை பட குழுவினர் அனைவருமே உச்சகட்ட மகிழ்ச்சியில் உள்ளனர்.முதல் பாகமே வேற லெவல் வெற்றியை கண்டுள்ள நிலையில், இரண்டாம் பாகத்தில் மீதான எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது. இப்படம் வெளியாகி 6 நாட்களில் இதுவரை 26 கோடி வரை வசூல் செய்துள்ளது. 


இந்த நிலையில் இப்படம் குறித்து சூரி அண்மையில் பேசிய விடயம் ஒன்று வைரலாகி வருகின்றது. அதாவது எனக்கு இந்த படத்தில் லவ் சீன் வைக்கும் போது எனக்கா இப்பிடி சீன் வைக்கிறாங்க என்று இருந்திச்சு, ஆனால் அதை என்னால் மறக்க முடியாது.நமக்குத் தானா நமக்கு தான் லவ் சாங்கா என்று மரத்துக்கு பின்னால் தனிய போய் சிரிக்க ஆரம்பிச்சிட்டேன். ஆனால் அந்த பாடலை எஞ்சாய் பண்ணி நடிச்சேன் என்றும் தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement