• Sep 20 2024

திடீரென முடிவுக்கு வரும் ஷு தமிழின் முக்கிய சீரியல்-அட இது நல்லா ஓடிக் கொண்டிருக்கும் சீரியலாச்சே

stella / 2 years ago

Advertisement

Listen News!

வெள்ளித்திரையைப் போலவே சின்னத்திரையில் ஒளிபரப்பாகும் சீரியல்கள் மற்றும் நிகழ்ச்சிகளுக்கென்று தனி ரசிகர் பட்டாளம் காணப்படுகின்றது. அந்த வகையில் சூப்பர் ஹிட் சீரியல்களைத் தொகுத்து வழங்குவதில் ஷு தமிழும் முக்கிய இடம் வகிக்கின்றது.

இதில் கடந்த சில வருடங்களுக்கு முதல் ஆரம்பித்து தற்பொழுதும் ஹிட்டாக ஓடும் சீரியல் தான் செம்பருத்தி. இந்த சீரியலில் ஷபானா கதாநாயகியாகவும் கார்த்திக் என்பவர் ஆதி என்னும் கதாப்பாத்திரத்தில் நடித்து வந்தார். இதனால் ஒரு கால கட்டத்தில் உச்சந் தொட்ட சீரியல் எனலாம்.

மேலும் இந்த சீரியலில் இருந்து காரத்திக் வெளியேறியதால் அக்னி என்பவர் கதாநாயகனாக நடித்து வருகின்றார். அத்தோடு இந்த சீரியலில் செய்யப்பட்ட மாற்றங்களினால் ரி ஆர் பியிலும் பின்னுக்குத் தள்ளப்பட்டள்ளது.

அத்தோடு இந்த சீரியலை எப்போது முடிப்பீர்கள் என்று கேட்டு வந்த நிலையில் புதிய தகவல் வெளியாகியுள்ளது. அதாவது இந்த சீரியல் தற்பொழுது அதன் முடிவுக்கட்டத்தை எட்டி விட்டதாக தகவல் வெளியாகியுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement