• Mar 12 2026

வீட்டை விட்டு வெளியே போன ஸ்ருதி- கடும் கோபத்தில் விஜயா- மீனா கொடுத்த ஷாக்- Siragadikka Aasai Promo

stella / 2 years ago

Advertisement

Listen News!


விஜய் டிவியில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாமல் ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் தான் சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் அடுத்து என்ன நடக்கப்போகின்றது என்பதற்கான ப்ரோமோ வெளியாகியுள்ளது.

விடிந்ததும் ரவிக்கும் ஸ்ருதிக்கும் டீ கொண்ட போகின்றார் விஜயா. டீயை வாங்கிக் குடிக்கும் ரவி அவ வீட்டில இல்லை வேலைக்கு கிளம்பி போய்ட்டா என்று சொல்கின்றார். இதைக் கேட்ட விஜயா அவ சொல்லிட்டு போகமாட்டாளா, அத்தை என்று ஒருத்தி நான் எதுக்கு இருக்கிறேன் என்று கேட்கின்றார்.


பின்னர் விஜயா அண்ணாமலையுடன் பேசிட்டு இருக்கும் போது அங்கு வரும் ரோகினி தனக்கும் டீ வேணும் என்று சொல்லி விட்டு, ஸ்ருதி எங்கே எனக் கேட்க அவ ஏதோ இங்கிலிஸ்ல சொல்லிட்டு போய்ட்டாள் என்கின்றார்.

அப்போது அங்கு வரும் மீனா, அத்தை ஸ்ருதி என்கிட்ட சொல்லிட்டு தான் போனாங்க, அத்தை கிட்ட சொல்லல சொல்லுங்க என்று அவங்க வெளில போய்ட்டாங்க என்று சொல்ல அண்ணாமலை விஜயாவை நக்கலாகப் பார்க்கின்றார். இத்துடன் இந்தப் ப்ரோமோ முடிவடைகின்றது.


Advertisement

Advertisement