நடிகை சமந்தா நடிப்பில் ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்திருந்த ‘மா இண்ட்டி பங்காரம்’ திரைப்படம் கடந்த ஜூன் 19-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. தமிழில் ‘எங்கள் தங்கம்’ என்ற பெயரில் வெளியான இந்த படம், ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.
இப்படத்தில் சமந்தா ஆக்ஷன் ஹீரோயினாக மிரட்டலான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். இயக்குநர் பி.வி. நந்தினி ரெட்டி இயக்கியுள்ள இந்த படத்தை சமந்தா மற்றும் ராஜ் நிடிமோரு இணைந்து தயாரித்துள்ளனர். மேலும், நடிகைகள் கௌதமி, ஸ்ரீமுகி மற்றும் நடிகர் குல்ஷன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

படம் வெளியான முதல் நாளிலிருந்தே ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ள நிலையில், சில தரப்பில் கலவையான விமர்சனங்களும் வெளியாகியுள்ளன. இருப்பினும், நீண்ட இடைவெளிக்குப் பிறகு சமந்தா நடித்துள்ள முக்கிய திரைப்படம் என்பதால், அவரது ரசிகர்கள் இந்த படத்தை அவரது வெற்றிகரமான கம்பேக் படமாக கொண்டாடி வருகின்றனர்.
இந்த நிலையில், படத்தின் முதல் இரண்டு நாட்கள் வசூல் குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது. அதன்படி, ‘எங்கள் தங்கம்’ திரைப்படம் உலகளவில் இரண்டு நாட்களில் ரூ.25 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த வசூல் சாதனை படக்குழுவினருக்கு பெரும் உற்சாகத்தை அளித்துள்ளது.
மேலும், இதே வேகத்தில் வசூல் தொடர்ந்தால், படம் விரைவில் ரூ.100 கோடி வசூல் கிளப்பில் இணையக்கூடும் என திரையுலக வட்டாரங்கள் கணித்து வருகின்றன. இதனால் சமந்தா ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.
Listen News!