பிரபல பாலிவூட் நடிகை ஐஸ்வர்யா ராய்பச்சன் இந்திய சினிமாவில் அழகின் பிரதிபலிப்பாகவும், திறமையின் உச்சக்கட்டமாகவும் பாராட்டப்படுபவர். அவர் தற்போது தனது குடும்பத்துடன் மும்பையிலுள்ள ஜுகுவில் வசித்து வருகின்றார். சமீபத்தில், ஐஸ்வர்யா ராய் குறித்து வெளியான செய்தி அனைத்து ரசிகர்களிடையேயும் பரபரப்பை ஏற்படுத்தயுள்ளது.
நேற்று மாலை, ஜுகுவில் அமைந்துள்ள ஐஸ்வர்யா ராய் வீட்டருகே ஒரு சொகுசு காரின் பின்னால் வந்த மாநகர போக்குவரத்து பஸ்ஸின் கவனயீனத்தால் அந்த காரின் பிற்பகுதி மோதியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அதிர்ச்சியாகும் செய்தி என்னவென்றால் , விபத்துக்குள்ளான அந்தச் சொகுசு கார் ஐஸ்வர்யா ராய்க்குச் சொந்தமான காராகும். எனினும் அந்த நேரத்தில் ஐஸ்வர்யா ராய் காரில் பயணிக்கவில்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. டிரைவர் மட்டுமே காரில் இருந்துள்ளார். அவர் தவிர மற்ற யாரும் காரில் பயணிக்கவில்லை என்பதும், இந்த விபத்தில் யாருக்கும் எந்தவித உடல் பாதிப்பும் ஏற்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
இதனை விசாரித்த பொலிஸார் பஸ்ஸை ஓட்டி வந்த டிரைவரின் கவனயீனமே இதற்குக் காரணம் எனக் கூறியுள்ளனர். ஆனால், அருகிலுள்ள சிசிடீவிக் காட்சிகள் மற்றும் பாதிக்கப்பட்ட காரின் பதிவுகளுக்கு ஏற்ப முழுமையான விசாரணை நடைபெறும் எனவும் கூறியுள்ளனர்.
Listen News!