தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளம் எனப் பல மொழிகளில் தனது தனிப்பட்ட நடிப்பால் ரசிகர்களைக் கவர்ந்த நடிகை கீர்த்தி சுரேஷ். தற்போது இவர் ஹிந்தி திரையுலகில் மீண்டும் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும், அவருக்கு ஜோடியாக பாலிவூட் நடிகர் ரன்பீர் கபூர் நடிக்கவுள்ளதாகவும் கூறப்படுகின்றது.
இந்தச் செய்தி வெளியானதிலிருந்து ரசிகர்கள் மட்டுமல்லாமல், சினிமா உலகமே எதிர்பார்ப்புடன் உள்ளது. அதுமட்டும் இல்லாமல், இது கீர்த்தி சுரேஷின் இரண்டாவது ஹிந்தி படம் என்பதும் குறிப்பிடத்தக்கது. ரன்பீர் கபூர், எப்பொழுதுமே கதைக்கு முக்கியத்துவம் கொடுக்கும் நடிகர்.
மேலும் அவரது அடுத்த படத்தில் ஹீரோயினியாக கீர்த்தி சுரேஷ் தேர்வு செய்யப்பட்டிருக்கிறார் என்பது, தமிழ் மற்றும் தெலுங்கு ரசிகர்களுக்கு பெரியளவில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த புதிய படத்தில், அவர் அழகும், இயல்பும் கலந்த ஒரு மென்மையான கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக படக்குழுவினர் கூறியுள்ளனர். இக்கதாப்பாத்திரம், கீர்த்தியின் உணர்ச்சி வெளிப்பாடு மற்றும் நடிப்புத் திறனை மெருகூட்டும் வகையில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
Listen News!