• Jan 18 2025

கால்பண்ணி நண்பன் கூறிய அந்த வார்த்தை! உச்சி குளிர்ந்து பேசிய சிறுத்தை சிவா...

subiththira / 2 months ago

Advertisement

Listen News!

இன்று திரையரங்கங்கள் அணைத்தும் கங்குவா திரைப்படத்தினால் கொண்டாடப்பட்டு வருகிறது. சூர்யாவின் ரசிகர்கள் வெறித்தனமாக விமர்சனம் செய்து வருகின்றனர். இயக்குனர் சிறுத்தை' சிவா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகிய 'கங்குவா' திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகியிருக்கிறது.


2022ம் ஆண்டு வெளியான 'எதற்கும் துணிந்தவன்', லோகேஷின் 'விக்ரம்' ரோலக்ஸ் கேமியோவிற்குப் பிறகு நீண்ட இடைவெளிக்குப் பிறகு திரையரங்குகளில் வெளியாகும் சூர்யாவின் திரைப்படம் என்பதால், ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன்  இருந்தார்கள்.


`கங்குவா' படத்தின் முதல் காட்சியை பார்த்தே டுவிட் விமர்சனங்கள் அலறிக்கொண்டு இருக்கிறது. கேரளா, ஆந்திரா, தெலங்கானா, துபாய், சிங்கப்பூர், அமெரிக்காவில் இரவே இப்படத்தின் முதல் காட்சி வெளியாகி வரவேற்பைப் பெற்று வருகிறது. முதல் காட்சியைப் பார்த்த ரசிகர்கள் பலர் படத்தின் பிரமாண்ட தயாரிப்பை, சூர்யாவின் நடிப்பைப் பாராட்டி வருகின்றனர். 

Suriya Delivers a Stellar Performance in Kanguva - Siva - TFJA

காசி திரையரங்கில் 'கங்குவா' படத்தின் முதல் காட்சியைப் பார்ப்பதற்காக உற்சாகத்துடன் வந்திருந்தனர் இயக்குநர் சிவா உள்ளிட்ட படக்குழுவினர். அப்போது ஊடகங்களுடன் பேசிய சிவா 'கங்குவா' இரண்டு ஆண்டு கால உழைப்பு இப்போது திரைக்கு வந்திருக்கிறது "அமெரிக்காவில் முதல் காட்சியைப் பார்த்தவர்கள், என் நண்பன் ஃபோன் பண்ணாங்க. மிகப்பெரிய வெற்றிப் படம்னு சொல்றாங்க.. ரொம்ப சந்தோஷமா இருக்கு" என்று மகிழ்ச்சியுடன் பேசியிருக்கிறார்.


Advertisement

Advertisement