• Jan 30 2026

அவள் உலக அழகியே.. சேலையில் கியூட்டா போஸ் கொடுத்த ரச்சிதா.! வைரலான போட்டோஸ்

subiththira / 4 weeks ago

Advertisement

Listen News!

விஜய் டிவி தொடர்களின் மூலம் ரசிகர்களின் மனதில் தனி இடத்தை பிடித்த நடிகைகளில் ஒருவர் ரச்சிதா மகாலட்சுமி. ‘பிரிவோம் சந்திப்போம்’ என்ற சீரியல் மூலம் தமிழ் தொலைக்காட்சி ரசிகர்களுக்கு அறிமுகமான அவர், தனது இயல்பான நடிப்பாலும் அழகான தோற்றத்தாலும் குறுகிய காலத்திலேயே பிரபலமானார். அதனைத் தொடர்ந்து பல வெற்றிகரமான சீரியல்களில் நடித்த ரச்சிதா, இன்று தமிழ் சின்னத்திரையில் தவிர்க்க முடியாத நடிகையாக மாறியுள்ளார்.

சின்னத்திரையில் கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து, ரச்சிதா மகாலட்சுமி திரைப்படங்களிலும் நடிக்கத் தொடங்கினார். துணை கதாபாத்திரங்கள், முக்கியமான வேடங்கள் என தேர்ந்தெடுத்து நடித்துவரும் அவர், மெதுவாகவே சினிமா உலகிலும் தனது இடத்தை உறுதிப்படுத்தி வருகிறார். நடிப்பு மட்டுமின்றி, தனது நேர்த்தியான ஸ்டைல் மற்றும் கேரக்டர் தேர்வுகள் மூலமாகவும் அவர் கவனம் ஈர்த்து வருகிறார்.


நடிப்பு வாழ்க்கைக்கு அப்பாற்பட்ட வகையில், நடிகை ரச்சிதா இன்ஸ்டாகிராமில், தனது போட்டோ ஷூட் படங்கள், பயண அனுபவங்கள், தனிப்பட்ட தருணங்கள் மற்றும் பாரம்பரிய உடைகளில் எடுத்த புகைப்படங்களை அடிக்கடி பகிர்ந்து வருவது வழக்கம். 

இந்த நிலையில், ரச்சிதா மகாலட்சுமி தற்பொழுது கோவிலுக்கு சேலையில் சென்ற புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அந்த போட்டோஸ் தற்பொழுது வைரலாகி வருகின்றது. 

Advertisement

Advertisement