• Sep 20 2024

காதலரை கைப்பிடித்தாரா சீரியல் நடிகை நட்சத்திரா-வைரலாகும் திருமணப் புகைப்படங்கள்..!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

தமிழில் கடந்த 2016ஆம் ஆண்டு இயக்குநர் ஜெயக்குமார் இயக்கத்தில் வெளியான ‘கிடா பூசாரி மகுடி’ படத்தில் அறிமுகமானவர் மலையாள நடிகை நட்சத்திரா குட்டிசேரி.

இவர் நடித்த இந்த படம், எதிர்பார்த்த வெற்றி பெறவில்லை. இதனால் சில காலம் திரையுலகில் இருந்து விலகியே இருந்தார்.

இதன் பின் ஜீதமிழில் ஒளிபரப்பான ‘யாரடி நீ மோகினி’ என்ற சீரியலில் நடித்து ரசிகர்களிடத்தே தனக்கென ஒரு இடத்தை பிடித்தார்.

இந்த சீரியல் மூலம், வெள்ளித்திரை மூலம் ரசிகர்கள் மனதில் இடம்பிடிக்க முடியாவிட்டாலும், சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு கிடைத்தது.

இவர் தற்போது கலர்ஸ் தமிழ் டிவியில் ஒளிபரப்பாகும் யாரடி நீ மோகினி எனும் சீரியலில் நடித்து வருகின்றார்.

இந்நிலையில் இவர் நீண்ட நாளாக காதலித்து வந்த விஸ்வா என்பவருடன் திருமணம் ஆகியுள்ளது.

இதனை இவர்கள் இருவருமே தமது இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்துள்ளனர்.இதனை அறிந்த ரசிகர்கள் பலரும் தமது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

இதோ அந்த புகைப்படம்….

பிற செய்திகள்

Advertisement

Advertisement