• Jun 07 2025

ரஜினி படத்தில் வில்லனாக நடிக்க முடியாது.. சத்யராஜை சமாதானப்படுத்தி லோகேஷ் செய்த சம்பவம்..!

Sivalingam / 1 year ago

Advertisement

Listen News!

ரஜினி படத்தில் வில்லனாக நடிக்க முடியாது என்று கூறிய சத்யராஜுக்கு அவரே எதிர்பார்க்காத ஒரு கேரக்டரை லோகேஷ் கனகராஜ் கொடுத்துள்ளதை அடுத்து ரஜினியின் அடுத்த படத்தில் சத்யராஜ் நடிப்பது கிட்டத்தட்ட உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்க உள்ள ’கூலி’ என்ற படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க இருக்கும் நிலையில் இந்த படத்தின் திரைக்கதை எழுதும் பணியை முடித்து விட்ட இயக்குநர் லோகேஷ் கனகராஜ் அடுத்ததாக இந்த படத்தில் நடிக்கும் நடிகர் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களை தேர்வு செய்யும் பணியில் இருக்கிறார்.

இந்நிலையில் ’கூலி’ படத்தில் சத்யராஜ் ஒரு முக்கிய கேரக்டரில் நடிக்க இருப்பதாகவும் குறிப்பாக வில்லனாக நடிக்க இருப்பதாகவும் கூறப்பட்ட நிலையில் ரஜினி படத்தில் வில்லனாக நடிக்க முடியாது என சத்யராஜ் கூறியதாகவும் இதனை அடுத்து அவருக்கு ரஜினியின் நண்பர் கேரக்டரை லோகேஷ் கனகராஜ் கொடுத்திருப்பதாகவும் தெரிகிறது.

ரஜினி , சத்யராஜ் ஆகிய இருவரும் நண்பர்களாக நடிக்கும் காட்சிகள் படத்தில் மாஸாக இருக்கும் என்றும் சத்யராஜே எதிர்பார்க்காத வகையில் இந்த கேரக்டர் அமைந்திருப்பதாகவும் கூறப்படுகிறது. ’மிஸ்டர் பாரத்’ என்ற படத்தில் சத்யராஜ் தந்தையாகவும் ரஜினிகாந்த் மகனாகவும் நடித்த நிலையில் நீண்ட இடைவெளிக்கு பிறகு தற்போது ஒரே படத்தில் இருவரும் இணைந்து நடிக்க உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த படத்தின் படப்பிடிப்பு வரும் ஜூன் மாதம் தொடங்க இருப்பதாகவும் இந்த படத்திற்கான பாடல் கம்போஸ் பணியை அனிருத் தொடங்கி விட்டதாகவும் கூறப்படும் நிலையில் இந்த படத்தில் ஸ்ருதிஹாசன் உட்பட மேலும் சிலர் இணைய இருப்பதாகவும் அது குறித்த தகவல்களும் விரைவில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது. 

Advertisement

Advertisement