• Sep 20 2024

இந்த அடி அடிக்கிறாங்க.. சமீரா ரெட்டிக்கு இதுதான் பெஸ்ட் மசாஜா?

Sivalingam / 1 month ago

Advertisement

Listen News!

நடிகை சமீரா ரெட்டியை அவரது இரண்டு குழந்தைகள் அடித்து மசாஜ் செய்யும் வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வரும் நிலையில் இதுதான் பெஸ்ட் மசாஜ் என கமெண்ட்கள் பதிவாகி வருகின்றன.

இந்தி மற்றும் தெலுங்கு படங்களில் நடித்துக் கொண்டிருந்த நடிகை சமீரா ரெட்டி, சூர்யா நடிப்பில் கௌதம் மேனன் இயக்கத்தில் உருவான ’வாரணம் ஆயிரம்’ என்ற திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். அதன் பிறகு அஜித் நடித்த ’அசல்’ கௌதம் மேனன் இயக்கிய ’நடுநிசி நாய்கள்’ லிங்குசாமி இயக்கிய ’வேட்டை’ விஷால் நடித்த ’வெடி’ உள்பட சில தமிழ் படங்களில் நடித்தார்.

இந்த நிலையில் நடிகை சமீரா ரெட்டி கடந்த 2014 ஆம் ஆண்டு தொழிலதிபர் அக்சய் என்பவரை திருமணம் செய்து கொண்ட நிலையில் இந்த தம்பதிக்கு ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர்.

இந்த நிலையில் நடிகை சமீரா ரெட்டி  இன்ஸ்டாகிராமில் பிரபலம் என்பதும் அவருக்கு சுமார் இரண்டு மில்லியன் ஃபாலோயர்கள் உள்ள நிலையில் அவ்வப்போது தனது குடும்ப புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பதிவு செய்து வருவார்.

இந்த நிலையில் சமீரா ரெட்டி சமீபத்தில் தனது இரண்டு குழந்தைகளும் அவரது முதுகில்  அடித்து மசாஜ் செய்யும் வீடியோவை வெளியிட்டுள்ளார். ஒரு தாய்க்கு இதைவிட பெஸ்ட் மசாஜ் எதுவும் இல்லை என்று இந்த வீடியோவுக்கு கமெண்ட்கள் பதிவாகி வருகிறது.

Advertisement

Advertisement