தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வரும் நடிகை சமந்தா, வைரஸ் பாதிப்புகளுக்கு ஹைட்ரஜன் பெராக்சைட் நெபுலைசேஷன் எனப்படும் சிகிச்சையை பயன்படுத்துவதாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து இருந்தார்.
இதை பார்த்த கல்லீரல் நிபுணரும் பிரபல மருத்துவருமான டாக்டர் ஃபிலிப்ஸ், நடிகை சமந்தாவை கடுமையாக சாடி இருந்தார். மேலும், அவரை சிறையில் அடைக்க வேண்டும் எனவும் தனது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவிட்டு இருந்தார்.
இதைத்தொடர்ந்து மருத்துவரின் பேச்சுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக மீண்டும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நீண்ட அறிக்கை ஒன்றை வெளியிட்டு விளக்கம் கொடுத்திருந்தார் சமந்தா. அதில் நிபுணர்களின் ஆலோசனை படியும் தானே ஆய்வு செய்த பிறகும், தனக்கு பயனளித்த மருத்துவ சிகிச்சை முறைகளை தான் பரிந்துரைத்ததாக குறிப்பிட்டுள்ளார்.
இந்த நிலையில், நடிகை சமந்தாவின் நீண்ட விளக்கத்தை தொடர்ந்து மருத்துவர் மற்றொரு பதவில் சமந்தாவை மீண்டும் கடுமையாக விமர்சித்துள்ளார்.
அதன்படி அவர் கூறுகையில், சமந்தா நீண்டதொரு விளக்கம் கொடுத்துள்ளார். நான் கூறிய அறிவியல் பூர்வமான விமர்சனங்களை எதிர்கொள்ளாமல் தன்னை பாதிக்கப்பட்டவராக பாவனை செய்கின்றார். இந்த மாதிரி தவறான மருத்துவ ஆலோசனைகளை சமந்தா இதற்கு முன்பும் வழங்கியுள்ளார்.
மக்களின் உடல்நலத்தை பற்றி எந்த அக்கறையும் இல்லாது இந்த மாதிரியான பிரபலங்கள் மக்களிடம் பல தவறான கருத்துக்களை பரப்புகின்றார்கள். அவர்களிடமிருந்து மக்களை காப்பாற்றத்தான் என்னை போன்ற மருத்துவர்கள் கருத்துக்களை கூறுகின்றார்கள். சமந்தா இதை உணர்ந்திருந்தால் உடனடியாக அந்த பதிவை நீக்கிவிட்டு தனது லட்சக்கணக்கான ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்.
உண்மையில் நீங்கள் மக்களுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்று நினைத்தால் மருத்துவ ரீதியான அறிவை முதலில் வளர்த்துக் கொள்ளுங்கள் என மருத்துவர் ஃபிலிப்ஸ் தெரிவித்துள்ளார்.
Listen News!