பல தசாப்தங்களாக பாலிவூட்டைக் கலக்கி வரும் சல்மான்கான், தனது நடிப்பு மற்றும் ஸ்டைலால் எப்பொழுதும் சமூக வலைத்தளங்களில் ஜாம்பவானாகத் திகழ்கின்றார். சமீபத்தில் வெளியாகியுள்ள ஒரு நேர்காணல் வீடியோவில், அவர் அளித்த பதில் தற்போது மிகுந்த சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் கலந்த சல்மான்கான் தான் நடித்து வரும் புதிய படங்கள் குறித்தும், நடிப்புத் தேர்வுகள் பற்றியும் பேசியிருந்தார். தற்போது உருவாகிக் கொண்டிருக்கும் படத்தில் ஆக்சன் மற்றும் ரொமாண்டிக்காக ராஷ்மிகா மந்தனாவுடன் சல்மான்கான் நடித்திருந்தார்.
அந்நேர்காணலில் கலந்து கொண்ட திரை ஆர்வலர்கள் சல்மான்கானைப் பார்த்து "இத்தனை வயது வித்தியாசத்துடனும், ராஷ்மிகா போல வயது குறைவான ஹீரோயின்களுடன் எப்படி ஜோடி போட்டு நடிக்கிறீர்கள்?" என்று கேட்டிருந்தனர்.
அதற்கு சல்மான் சிரித்த படியே,"நான் ராஷ்மிகாவோட மட்டும் இல்ல அவங்களுக்கு கலியாணம் நடந்து மகள் பிறந்தாள் அவரோடையும் நடிப்பேன்" என நக்கலாக பதில் அளித்திருந்தார். சல்மான்கானின் இந்த வார்த்தைகள் ரசிகர்களிடையே பெரும் விமர்சனத்தை உருவாக்கியுள்ளது.
Listen News!