பாகுபலி படத்துக்குப் பின்னர் பான் இந்தியா படங்களில் மட்டுமே நடித்து வருகிறார் பிரபாஸ். ஆனாலும் அவருக்கு எந்த படங்களும் சரியான ரீச் கொடுக்கவில்லை. சாகோ, ராதே ஷ்யாம், ஆதி புருஷ் என இந்த மூன்று படங்களுமே படு தோல்வியடைந்தன. அதனால் சலார் படத்தை அதிகம் நம்பியிருந்தார் பிரபாஸ். அதற்கு கை மேல் பலன் கிடைத்துள்ளது போல. சலார் படத்துக்கு கலவையான விமர்சனங்கள் கிடைத்தாலும், பாக்ஸ் ஆபிஸில் மாஸ் காட்டியுள்ளது.
பிரசாந்த் நீல் இயக்கத்தில் பிரபாஸ் நடித்துள்ள சலார் திரைப்படம் 22ம் தேதி வெளியாகியுள்ள நிலையில், முதல் நாளில் இருந்தே மாஸ் காட்டி வருகிறது. பிரபாஸின் கேரியரில் தரமான ஓப்பனிங் உடன் வெளியான சலார், பாக்ஸ் ஆபிஸிலும் மிரட்டி வருகிறது. அதன்படி சலர் முதல் நாள் பாக்ஸ் ஆபிஸ் பற்றிய தகவல்கள் வெளியாகியுள்ளன.
அதன்படி, சலார் திரைப்படம் முதல் நாளில் 178 கோடி ரூபாய் வசூலித்ததாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தது. இது உலகம் முழுவதுமான பாக்ஸ் ஆபிஸ் கலெக்ஷன் என்பதும் குறிப்பிடத்தக்கது. அதேநேரம் இந்தியாவில் மட்டும் 90 கோடி வரை வசூலித்ததாக சொல்லப்படுகிறது.
அதன்படி, தமிழ், மலையாளம் மொழிகளில் தலா 3.5 கோடி கலெக்ஷன் செய்ததாக சொல்லப்பட்டது. தெலுங்கில் 66.75 கோடியும், இந்தியில் 15 கோடியும் வசூல் செய்துள்ளது. கன்னடத்தில் 90 லட்சம் ரூபாய் மட்டுமே கலெக்ஷன் செய்தது. இதனடிப்படையில் உலகம் முழுவதும் முதல் நாளில் 140 கோடி வரை வசூலாகிருக்கும் என பாக்ஸ் ஆபிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஆனால் படக்குழு 178 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளதாக போஸ்டர் வெளியிட்டது. அந்த வகையில் இந்தாண்டு முதல் நாள் ஓபனிங்கில் சாதனை படைத்தது சலார் தான் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆனால், படக்குழு தரப்பில் இருந்து இதுவரை இரண்டாவது நாள் பாக்ஸ் ஆபிஸ் வசூல் பற்றி அப்டேட் வெளியாகவில்லை. முதல் நாளே 178 கோடி அறிவித்த படக்குழு, இரண்டாவது நாளில் 100 கோடி என அறிவிக்க வாய்ப்புள்ளது. இருப்பினும் எப்படிப் பார்த்தாலும் பாக்ஸ் ஆபிஸில் இரண்டே நாட்களில் 200 கோடி ரூபாய் வசூலை கடந்துள்ளது சலார். இதனால் பிரபாஸ் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.
Listen News!