• Apr 01 2025

நடிச்சதெல்லாம் போதும், இனிமேல் அடுத்த லெவல் தான்.. சாய்பல்லவி எடுத்த அதிரடி முடிவு..!

Sivalingam / 1 year ago

Advertisement

Listen News!

நடிகை சாய்பல்லவி தற்போது தமிழ் தெலுங்கு திரையுலகில் பிஸியாக இருக்கும் நிலையில் கூடிய விரைவில் அவர் நடிப்பதை நிறுத்திவிட்டு அடுத்த லெவலுக்கு செல்ல இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

பிரேமம்என்ற மலையாள படத்தின் மூலம் பிரபலமான நடிகை சாய்பல்லவி அதன் பின்னர்மாரி 2’ ‘என்ஜிகே’ ‘கார்கிஉள்ளிட்ட பல  படங்களில் நடித்த நிலையில் தற்போது சிவகார்த்திகேயன் ஜோடியாக 'அமரன்படத்தில் நடித்து வருகிறார் என்பதும் இந்த படம் விரைவில் வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

அதுமட்டுமின்றி தெலுங்கு மற்றும் ஹிந்தி படங்களில் நடித்து வரும் சாய்பல்லவி தனது கேரக்டருக்கு முக்கியத்துவம் இருந்தால் மட்டுமே நடிப்பார் என்பதும் விஜய்யின்வாரிசுஅஜித்தின்துணிவுஉட்பட ஒரு சில படங்களில் கூட அவர் நடிக்க மறுத்து விட்டதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் அடுத்த கட்டமாக திரைப்படங்களில் நடிப்பதை படிப்படியாக குறைத்து விட்டு அவர் படங்களை இயக்க இருப்பதாக கூறப்படுகிறது. தற்போது சாய்பல்லவி ஒரு கதையை ரெடி செய்து திரைக்கதையும் முழுமையாக முடித்து தயாராக வைத்திருப்பதாகவும் தனக்கு தெரிந்த ஒரு சில ஹீரோக்களிடம் அவர் கதை சொல்லி வருவதாகவும் விரைவில் அவர் ஒரு படத்தை இயக்குவது குறித்து அறிவிப்பு வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.

சாய் பல்லவிக்கு தற்போது அதிக திரைப்பட வாய்ப்புகள் வந்து கொண்டிருக்கும் நிலையில் நடித்த கோடிக்கணக்கில் பணத்தை வாங்கி பையில் போட்டொமா?  என்றில்லாமல் தேவையில்லாமல் இயக்குநர் என்ற ரிஸ்கை எடுப்பதாக அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் ஆலோசனை கூறி வந்தாலும் அவர் தனக்கு இயக்குநர் ஆக வேண்டும் என்பதுதான் ஆசை என்றும் அதை நிறைவேற்றியே தீருவேன் என்றும் கூறி வருவதாக தெரிகிறது.

Advertisement

Advertisement