சிறகடிக்க ஆசை சீரியலில் இன்று, விஜயா அண்ணாமலையை பார்த்து பாத்திங்களா இவன் புத்திசாலித்தனமா என்னமோ பண்ணுவான் என்று சொன்னீங்க என்ன பண்ணியிருக்கான் என்று பாத்திங்களா என்று கேட்கிறார். அதைக் கேட்ட அண்ணாமலை அவன் அப்புடி பண்ணேல என்று சொல்லுறான் எல்லோ பிறகு ஏன் கத்துற என்று கேட்கிறார். அதைத் தொடர்ந்து பொலீஸ் முத்துவப் பார்த்து அந்த குடும்பத்தில ஒராள் ஹாஸ்பிடலில இருக்கு அவருக்கு மட்டும் ஏதாவது நடந்தால் இவன் ஜெயிலில இருந்து வெளிய வரமுடியாது என்று சொல்லுறார்.
பின் முத்து நான் அப்புடி எல்லாம் பண்ணல என்று சொல்லுறார். அதைத் தொடர்ந்து முத்துவை பொலீஸ் அரெஸ்ட் பண்ணிக்கொண்டு போகிறார்கள். அதைப் பார்த்த ரோகிணி எப்புடியோ நம்ம பேரு வெளியில வரேல என்று நினைத்து சந்தோசப்படுறார். பின் ஸ்டேஷனில அருண் முத்துவை பார்த்தவுடனே என்னாச்சு என்று கேட்கிறார். அதனை அடுத்து முத்துவை பார்த்து அருண் இவர் இப்புடி எல்லாம் செய்திருக்கமாட்டாரு என்று சொல்லுறார்.
அதைக் கேட்ட முத்து எனக்காக யாருமே பேசவேண்டாம் என்று சொல்லுறார். அதனைத் தொடர்ந்து அருண் வெளியில வந்து பொலீஸ் கிட்ட அவன் தான் கண்டிப்பாக தப்பு பண்ணியிருப்பான் நான் சும்மா அவனுக்கு முன்னாடி நடிச்சேன் என்று சொல்லுறார். இதனை அடுத்து மீனா இன்ஸ்பெக்ட்டர் வீட்ட போய் நிற்கிறார். அங்க அவர் இல்ல என்று தெரிஞ்சவுடனே மீனா ரொம்பவே கவலைப்படுறார்.
பின் மீனா அருண் கிட்ட ஹெல்ப் பண்ணச் சொல்லி கேட்கிறார். அதுக்கு அருண் தன்னாலயும் எதுவும் பண்ணேலாமா இருக்கு என்று சொல்லுறார். அதைத் தொடர்ந்து மீனா ரதி கிட்ட அங்க வந்த ஆட்களின்ட அடையாளத்தை உன்ர லவ்வர் கிட்ட கேட்டு சொல்லு என்கிறார். பின் அந்த பையன் இங்க வந்த ஆளுங்க சிற்றி என்ற பெயரை சொன்னாங்க என்கிறார். அதைக் கேட்ட உடனே மீனா பொலீஸ் கிட்ட போய் சொல்லுறார். பின் சிற்றிய பொலீஸ் கூப்பிட்டு விசாரிச்சவுடனே ரோகிணி தான் இதை பண்ணாங்க என்று தெரிய வருது. இதுதான் இன்றைய எபிசொட்.
Listen News!