தமிழ் சினிமாவில் பிரம்மாண்ட படைப்புகளை வழங்கி வந்த இயக்குநர் ஷங்கர், சமீபத்திய பேட்டியில், தனது ஒரு முக்கிய திட்டத்தை கைவிட்டதற்கான ஆழ்ந்த வருத்தத்தை வெளியிட்டுள்ளார்.
தனது தொடக்க காலத்திலேயே, “சினிமெட்டிக் யூனிவெர்ஸ்” என்ற யோசனை குறித்து யோசித்ததாகவும், அதை செயல்படுத்த இயலாதது தன்னை இன்று வருத்தத்துக்குள்ளாக்குகிறது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
“நான் இந்தியன், அந்நியன், சிவாஜி ஆகிய படங்களை ஒன்றாக இணைத்து ஒரு யூனிவெர்ஸ் உருவாக்க நினைத்தேன். ஆனால் சிலரை நம்பி, அந்த யோசனையை விட்டுவிட்டேன். இன்று அதை நினைக்கும் போது என் தவறாகவே நினைக்கிறேன்,” என ஷங்கர் தெரிவித்துள்ளார்.
அந்த நேரத்தில் சிலர், “இந்த மாதிரியான யூனிவர்ஸ் யோசனைகள் தமிழுக்கு வேலை செய்யாது” என கூறி, மனதில் குழப்பம் ஏற்படுத்தியதாகவும், அதனால் அந்த திட்டத்தை கைவிட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இன்று, லோகேஷ் கனகராஜ் உருவாக்கி வரும் “LCU” (Lokesh Cinematic Universe) தமிழ் சினிமாவில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
இதைக் கவனித்த இயக்குநர் ஷங்கர், “இன்று அதை மக்கள் மகிழ்வுடன் ஏற்கின்றனர். இதே விஷயத்தை நான் செய்திருக்க வேண்டிய நேரத்தில் விட்டுவிட்டேன்” என்ற வருத்தத்தையும் தெரிவித்துள்ளார்.
திரையுலக வட்டாரங்கள், “இந்தியன், அந்நியன், சிவாஜி” போன்ற வெற்றி படங்களை ஒன்றிணைத்த ஒரு யூனிவெர்ஸ் உருவாக்கியிருந்தால், அது தமிழ் சினிமாவிற்கே ஒரு புதிய வரலாற்றை எழுதியிருக்கும்” எனக் கருத்து தெரிவிக்கின்றன.
Listen News!