• Oct 08 2025

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ரோபோ சங்கர்.! திடீரென என்னாச்சு தெரியுமா?

Aathira / 3 weeks ago

Advertisement

Listen News!

விஜய் டிவி நிகழ்ச்சிகள் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் ரோபோ சங்கர். இவர் மிமிக்ரி ஆர்டிஸ்ட் ஆக  அசத்தி வந்தார். அதன் பின்பு சினிமாவிலும் காமெடி நடிகராக  நடித்தார். தற்போது கதாநாயகனாகவும் களமிறங்கி உள்ளார். 

சமீபத்தில்  உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்ட ரோபோ சங்கர்,  உடல் மெலிந்து மிகவும் சோர்வாக இருக்கும் புகைப்படங்கள் வெளியாகி அதிர்ச்சியை கொடுத்தன. ரோபோ ஷங்கரின் உடல் மெலிவை பார்த்த  பலரும் தமது வருத்தத்தை தெரிவித்தனர். 

எனினும்  தன்னுடைய விடாமுயற்சியினால் மீண்டும்  நோயின்பிடியில் இருந்து மீண்டு வந்தார் ரோபோ சங்கர். அதன் பின்பும்  படங்களில் நடித்தார்.  அது மட்டும் இல்லாமல் இவருடைய மகளின் திருமணம், பேரப்பிள்ளை என குடும்பத்தாருடன் சந்தோஷமாகவும் காணப்பட்டார். 


இந்த நிலையில், ரோபோ சங்கர் திடீரென மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அதன்படி சென்னையில் படப்பிடிப்பில் இருந்தபோது நீர்ச் சத்து குறைபாடு மற்றும் குறைந்த ரத்த அழுத்தம் காரணமாக மயங்கி விழுந்துள்ளார். 

இதையடுத்து துரைப்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு தற்போது அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு,  மருத்துவ கண்காணிப்பில் இருந்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. 


  

Advertisement

Advertisement