• Sep 17 2025

படம் சொதப்பினால் மக்கள் வேஸ்ட் என்று சொல்லுவாங்க.! உஷாரான நெல்சன்

Aathira / 2 hours ago

Advertisement

Listen News!

கடந்த 2023 ஆம் ஆண்டு  இயக்குநர் நெல்சன் இயக்கத்தில்  சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த திரைப்படம் தான் ஜெயிலர். இந்த படம் சுமார் 600 கோடிக்கு மேல் வசூலித்து மிகப்பெரிய சாதனையை படைத்தது. பின்பு இந்த படத்தின் இரண்டாவது பாகம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. 

ஜெயிலர் படத்தின் முதலாவது பாகத்தில் மோகன்லால், சிவராஜ்குமார் ஆகியோர் கேமியா ரோலில்  நடித்து இருந்தனர். இதன் இரண்டாவது பாகத்திலும் இவர்கள் நடிக்க உள்ளார்கள். இந்த படத்தின் படப்பிடிப்பு பணிகளும் தற்போது விறுவிறுப்பாக இடம்பெற்று வருகின்றன. 

ஜெயிலர் 2 படத்தில் மலையாள நடிகரான  சுராஜ் வெஞ்சாரமூடு  வில்லனாக நடித்து வருகின்றாராம்.  மேலும் இதில் நடிகை வித்யா பாலன்  இணைந்துள்ளதாக கூறப்படுகின்றது.  இதன் கதைக்களம் கேரளாவை மையப்படுத்தியது என்றும், பணிகள் யாவும் கேரளாவில் நடைபெற்று வருவதாகவும் தகவல்கள் வெளியாகின. 


இந்த நிலையில், இயக்குநர் நெல்சன் ஜெயிலர் 2 படம் பற்றி கூறுகையில், நான் எந்த எதிர்பார்ப்பையும் முன் வைக்க மாட்டேன்.. அந்தப் படம் வெளியாகி என்ன செய்கின்றதோ செய்யட்டும்.. ஒருவேளை படம் சொதப்பிவிட்டால் மக்கள் வேஸ்ட் என்று சொல்லிவிடுவார்கள் என தெரிவித்துள்ளார். 

தற்போது தமிழில்  வெளியாகும் படங்களுக்கு மிகப்பெரிய  நம்பிக்கை கொடுக்கப்படுகின்றது. ஆனால்  இறுதியில் அந்த  படம் கடும் விமர்சனங்களுக்கு உள்ளாகி தோல்வியை  தழுவுகின்றன.  இந்த காரணத்தினால்  நெல்சன் இவ்வாறு தெரிவித்துள்ளார் .




 

Advertisement

Advertisement