• Jun 11 2025

‘ரெட்ரோ’ OST ரிலீஸ் அப்டேட்.! இசை ரசிகர்களுக்காக சந்தோஷ் நாராயணன் பகிர்ந்த தகவல்...

subiththira / 18 hours ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் தற்போது பெரும் கவனம் பெற்றிருக்கும் படங்களில் ஒன்றாக உருவெடுத்திருக்கிறது ‘ரெட்ரோ’. சூர்யா நடிப்பில் வெளியான இப்படம், 80’s காலத்தினை பிரதிபலிக்கும் வித்தியாசமான கதைக்களம் மற்றும் இசை அம்சங்களால் தனிப்பட்ட ஓர் அனுபவத்தை வழங்கியிருந்தது. இப்படத்தில் பாடலை இசையமைத்தது இசை மாயாஜாலகனாக உயர்ந்துள்ள சந்தோஷ் நாராயணன். 


தற்பொழுது இப்படத்தின் Original Soundtrack (OST) பற்றிய அப்டேட்டை, சந்தோஷ் நாராயணனே நேரடியாக தனது சமூகவலைத்தளப் பக்கங்களில் பகிர்ந்துள்ளார். ரசிகர்கள் நீண்ட நாட்களாக எதிர்பார்த்த OST, வருகின்ற வாரத்தில் வெளியிடப்பட இருப்பதாக அவர் உறுதியளித்துள்ளார்.

‘ரெட்ரோ’ திரைப்படம் வெளியான நாள் முதல், அதன் பின்னணி இசை ரசிகர்களிடையே பெரும் பரவசத்தை ஏற்படுத்தியது. குறிப்பாக, படத்தின் முக்கியமான மனநிலை மாற்றங்கள், சண்டை காட்சிகள் மற்றும் உணர்ச்சி பூர்வமான கதைக்களம் அனைத்திலும் சந்தோஷ் நாராயணனின் BGM தனி அடையாளத்தை  ஏற்படுத்தியது.


அந்தவகையில் சந்தோஷ் நாராயணன் தனது X தளப்பக்கத்தில், இந்த தகவலை மிகவும் எளிமையாகப்  பகிர்ந்துள்ளார். இந்த பதிவு, வெளியான சில மணி நேரங்களிலேயே ஆயிரக்கணக்கான லைக்குகள், ஷேர்களுடன் வைரலாகியுள்ளது. ரசிகர்களும், “Finally! We’ve been waiting for this masterpiece” என்ற கமெண்ட்ஸுடன் தங்களது எதிர்பார்ப்பை வெளிப்படுத்தியுள்ளனர்.


Advertisement

Advertisement