விஜய் டிவியில் கலக்கப் போவது யாரு என்னும் நிகழ்ச்சியின் மூலம் தொகுப்பாளராக அறிமுகமாகியவர் தான் ரக்சன்.
இதனைத் தொடர்ந்து பல நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கி வந்த இவருக்கு குக்வித் கோமாளி நிகழ்ச்சியே சிறந்த அடையாளத்தை உருவாக்கிக் கொடுத்தது.
இது தவிர கடந்த 2019 ஆம் ஆண்டு தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் துல்கர் சல்மான் நடிப்பில் வெளியான கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்தில் முக்கியமான கதாப்பாத்திரத்தில் நடித்து நடிகராக அறிமுகமாகினார்.
இதை தொடர்ந்து, விஜய் டிவியில் கலக்கப்போவது யாரு புகழ் தீனா அவருடன் இணைந்து "மறக்குமா நெஞ்சம்" என்கின்ற திரைப்படத்தில் நடித்துள்ளனர்.
இந்த படம் நாளை வெளியாகவுள்ள நிலையில், அதன் விமர்சனத்தை பார்ப்போம் வாங்க,
2018 ஆம் ஆண்டு நீதிமன்றம் ஒரு முக்கியமான தீர்ப்பைவழங்குகின்றது. அதாவது 2008 ஆம் ஆண்டு மாணவர்கள் பள்ளி பரீட்சையில் 100% தேர்ச்சியை கொடுக்க மோசடி செய்துள்ளது என்றும், இதனால் அந்த ஆண்டு படித்த மாணவர்கள் அனைவரும் மூன்று மாதங்கள் மீண்டும் பள்ளிக்கு வந்து படித்து தேர்வு எழுத வேண்டும் என்றும் தீர்ப்பு வழங்கப்படுகிறது.
இதன் காரணமாகவே மாணவர்கள் அனைவரும் மீண்டும் பள்ளிக்கு வருகிறார்கள். அங்கு என்னென்ன நடக்கிறது என்பதே மறக்குமா நெஞ்சத்தின் கதையாக காணப்படுகிறது.
அதன்படி மறக்குமா நெஞ்சத்தை கதையாக கேட்கவும், பார்க்கவும் வித்தியாசமான புதுவித அனுபவத்தை கொடுத்துள்ளது. முழுக்க முழுக்க இளைஞர்களை மையப்படுத்தி இந்த படம் எடுக்கப்பட்டுள்ளது.
அத்துடன் பள்ளிக்கால நினைவுகளை மீண்டும் நினைவூட்டும் வகையில் இந்த படத்தின் காட்சிகள் வடிவமைக்கப்பட்டுள்ளது. ரக்சன் மற்றும் தீனா இணைந்து நடிக்கும் நிறைய காமெடி காட்சிகள் பார்ப்போரை ரசிக்க வைத்ததோடு, பல இடங்களில் தீனா அதற்காக கைத்தட்டல்களையும் பெறுகிறார்.
மேலும், இந்த படத்தில் காணப்படுகின்ற முக்கியமான பிரச்சினை, அதில் நடித்த அனைவரின் நடிப்பும் தான்.
சின்னத்திரை நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வந்த ரக்சன், தற்போது வெள்ளித்திரையில் ஜொலிக்க இன்னும் சற்று கூடுதல் முயற்சி எடுத்திருக்க வேண்டும் என்று தோணுகிறது.
படத்தில் உள்ள கதாபாத்திரங்கள் நடிப்பதற்கு மிகவும் சிரமப்படுகிறார்கள் என்பதை அப்படியே பிரதிபலிக்கிறது. இரண்டாம் பாதியில் தேவையற்ற நிறைய காட்சிகளும் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
Listen News!