• Dec 03 2024

வீடியோ காலில் அட்டூழியம் செய்த பிக் பாஸ் பிரபலங்கள்! வெற்றியின் பின்னும் தொடரும் பிரிவினை?

Aathira / 10 months ago

Advertisement

Listen News!

பிக் பாஸ் சீசன் 7 மிகவும் பரபரப்பாக சென்றமைக்கு முக்கிய காரணமே பிரதீப்பின் ரெட் கார்ட் வழங்கிய விடயத்தினால் தான்.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்குபற்றிய போட்டியாளர்களுள், பிக் பாஸ் டைட்டிலை வின் பண்ணுவார் என ஆணித்தரமாக நம்பப்பட்ட ஒருவராக பிரதீப் காணப்பட்டார்.


எனினும், அவரை பிக் பாஸ் நிகழ்ச்சியில் தொடர விடாமல் திட்டம் போட்டு மாயா டீம் வெளியேற்றியது. இது தற்போது வரையில் சோசியல் மீடியாவில் புகைந்து வருகின்றது.

இதை தொடந்து பிரதீப்க்கு எதிரான டீம் A எனவும், அவருக்கு ஆதரவான போட்டியாளர்கள் டீம் B எனவும் பிக் பாஸ் வீட்டில் பிரிக்கப்பட்டு பார்க்கப்பட்டார்கள்.


இந்த நிலையில், தற்போது  பிக் பாஸ் டீம் B ஐ சேர்ந்தவர்கள் வீடியோ கால் பண்ணி பேசியுள்ளனர். 

அதன்படி, அர்ச்சனா, கூல் சுரேஷ், விஷ்ணு, புரோவோ ஆகிய நால்வரும் வீடியோ  காலில் பேசிய புகைப்படத்தை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு உள்ளனர்.

தற்போது குறித்த புகைப்படம் தான் வைரலாகி உள்ளது. நீண்ட நாட்களுக்கு பிறகு ஒன்று சேர்ந்து அரட்டை அடித்ததால், கூல் சுரேஷ் காமெடி பண்ணியே அட்டூழியம் செய்து இருப்பார் என ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகிறார்கள்.


Advertisement

Advertisement