"2கே லவ் ஸ்டோரி" திரைப்படம் சிட்டி லைட் பிக்சர்ஸ் தயாரிப்பில் டி.இமான் இசையமைத்துள்ளார். புதுமுக நாயகன் ஜெகவீர நாயகனாக நடித்துள்ள இந்த படத்தில் மீனாட்சி கோவிந்தராஜன் நாயகியாக நடித்துள்ளார். மேலும் பால சரவணன். ஆண்டனி பாக்யராஜ், ஜெயபிரகாஷ், வினோதினி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

திருமணத்திற்கு புகைப்படம் எடுக்கும் இளைஞர்கள் குழுவின் வாழ்வில் நடக்கும் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு, அனைவரும் ரசிக்கும் வகையில் இந்த படத்தின் திரைக்கதை அமைந்துள்ளது. இந்த படத்துக்கு தணிக்கை குழு 'யு' சான்றிதழ் வழங்கியுள்ளது. சமீபத்தில் 2கே லவ் ஸ்டோரி' படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர், டீசர் மற்றும் பர்ஸ்ட் சிங்கிள் வெளியாகி வைரலானது.
d_i_a

இந்நிலையில் டிசம்பர் மாதம் 13-ந் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ள இந்த திரைப்படத்தின் 'விட்டுக்கொடுத்து போடா' என்ற இரண்டாவது பாடல் வெளியாகி உள்ளது. இந்த பாடலை டி.இமான் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ளார். இந்த பாடலை ஆதித்யா மற்றும் நிகிதா காந்தி ஆகியோர் பாடியுள்ளனர்.
Listen News!