• Jun 26 2024

சிம்பு திருமணம் செய்தால் தான் நானும் திருமணம் செய்வேன்: விஜய் டிவி சீரியல் நடிகை பிடிவாதம்..!

Sivalingam / 1 week ago

Advertisement

Listen News!

சிம்பு திருமணம் செய்தால் மட்டும்தான் நானும் திருமணம் செய்வேன் என்று விஜய் டிவி சீரியல்களில் நடித்த நடிகை பிடிவாதமாக கூறி இருப்பது ரசிகர்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

நடிகர் சிம்புவுக்கு 41 வயதாகியும் இன்னும் திருமணம் ஆகவில்லை என்பதும் இப்போதைக்கு அவருக்கு திருமணம் நடக்குமா என்பது கேள்விக்குறியாக உள்ளது என்பதும் தெரிந்தது. சிம்புவின் பெற்றோர் அவருக்கு கடந்த சில ஆண்டுகளாக பெண் பார்த்து வரும் நிலையில் எந்த பெண்ணும் சிம்புவுக்கு செட் ஆகவில்லை என்றும் சிம்புவுக்கு பொருத்தமான பெண்ணை தேடிக் கொண்டிருக்கிறோம் என்றும் டி ராஜேந்தர் - உஷா தம்பதி பலமுறை பேட்டி அளித்துள்ளனர்.

இந்த நிலையில் சிம்புவின் தீவிர ரசிகைகளில் ஒருவரான விஜய் டிவி சீரியல் நடிகை ரேமா அசோக் என்பவர் சிம்புக்கு எப்போது திருமணம் ஆகிறதோ, அதன் பின்னர் தான் நான் திருமணம் செய்து கொள்வேன் என்று கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அவருடைய இந்த கருத்துக்கு ’இப்படி ஒரு முடிவை நீங்கள் எடுத்தால் கடைசி வரை உங்களுக்கு திருமணம் நடக்காது’ என்று காமெடியாக கமெண்ட்கள் பதிவாகி வருகின்றன.

நடிகை ரேமா அசோக் விஜய் டிவியில் ஒளிபரப்பான ’கல்யாணம் முதல் காதல் வரை’ ’நாச்சியார்புரம்’ ’சின்னத்தம்பி’ உள்பட சில சீரியல்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement