• Jan 18 2025

ஜாக்குலின் நீ கலக்கு! சாச்சனா ஓவரா பேசாத! புட்டு புட்டு வைத்த ரவீந்தர்! biggboss-8

subiththira / 3 months ago

Advertisement

Listen News!

பிக் பாஸ் சீசன் 8ல் முதல்  நாமினேட் ஆகி வெளியே சென்றுள்ளார் ரவீந்தர். இவர் செல்லும் போது ஒவ்வொரு போட்டியாளர்களையும் பார்த்து அட்வைஸ் கொடுத்தார்.  அதில் அர்னவ் நீ பக்கா ஃபேக், ரஞ்சித் சார் சாமி தங்கம்ன்னு சொல்லிட்டிருக்கறதெல்லாம் வேலைக்கு ஆகாது. ரொம்ப நாளு நடிக்க முடியாது. தீபக்கு எதிரியை பின்னாடி அடிக்கக் கூடாது. 


முன்ன பின்ன பேசக் கூடாது. அருண் நீ ஒண்ணும் அத்தனை அப்பாவி இல்ல. சத்யா தம்பி பாடி முக்கியமில்ல மைண்டுதான் முக்கியம் என்று கூறினார். மேலும் விஷாலு தம்பி உனக்காக நீ யோசிச்சு விளையாடு ஜெஃப்ரி வாயைக் கட்டுப்படுத்து. 


பவித்ரா. நீ ரியல் இல்ல. முத்து நல்லா விளையாடு. சவுந்தர்யா சாய்ஞ்சு உக்காந்துடாத முன்னாடி நகர்ந்து போ, தர்ஷா நீ பாதி ஃபேக, தர்ஷிகா நீ செம்ம கேடி. சாச்சனா தேவைப்பட்ட இடத்துல மட்டும் பேசு, ஜாக்குலின் நீ கலக்கு, நல்லா விளையாடு. ஆனந்தி நீயொரு நல்ல human. பயப்படாம ஆடு” என்றெல்லாம் அதிரடியான கருத்துகளைச் சொன்ன ரவி “சுனிதா. இந்த வீட்டிலயே நீதான் ஒரிஜினல் ரியல். 


தமிழ்நாடே உன்னைக் கொண்டாடும்" என்று புகழ்ந்ததைக் கேட்டு நெகிழ்ந்தார் சுனிதா. ரவியின் அதிரடியான கருத்துகளை கேட்டு அதிர்ச்சியடைந்தாலும் மக்கள் சுதாரித்துக் கொண்டார்கள். ‘இது அவரோட கருத்துதான். எனக்கும் இதுக்கும் சம்பந்தமில்ல’ என்று ஜாலியாக பின்வாங்கினார் விஜய் சேதுபதி.  

Advertisement

Advertisement