• Nov 19 2025

சொந்த வீட்டில் வைத்து போலீசாரால் மடக்கி பிடிக்கப்பட்ட நடிகர் பாலா? திடுக்கிடும் காரணம்

Aathira / 1 year ago

Advertisement

Listen News!

நடிகர் பாலாவை அவருடைய முன்னாள் மனைவி அம்ருதா சுரேஷ் அளித்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் இன்றைய தினம் கைது செய்துள்ளனர். சமூக ஊடகங்களில் தனது முன்னாள் மனைவி அம்ருதாவையும் அவருடைய மகளையும் அவதூறாக பேசிய காரணத்தினால், சிறுவர் நீதி சட்டதின் கீழ் அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

அதாவது தனது முன்னாள் மனைவி அம்ருதாவை நடிகர் பாலா தொடர்ந்து துன்புறுத்தியதாகவும், அவருடைய மகளை துன்புறுத்தியதாகவும் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து இன்று அதிகாலை அவரது வீட்டில் வைத்து அவரை போலீசார் கைது செய்துள்ளார்கள்.

இவ்வாறு கைது செய்யப்பட்ட நடிகர் பாலா கடவந்துரா காவல் நிலையத்திற்கு அழைத்து செல்லப்பட்டு விசாரிக்கப்பட்டு இன்று மாலை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.


வே இந்த விவகாரம் தொடர்பாக பாலாவின் மகள் இணையத்தில் அவரை கண்டித்து பேசியிருந்தார். பாலாவின் மேலாளர் ராஜேஷ் மற்றும் அவருடைய நண்பர் உன்னிகிருஷ்ணன் ஆகியோரும் இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ளார்கள்.

நடிகர் பாலாவின் முன்னாள் மனைவி அம்ருதா அவரை விவாகரத்து செய்து பிரிந்த பின்னர் இசை அமைப்பாளர் கோபி  சுந்தரை காதலித்து திருமணம் செய்து கொண்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement