• Dec 04 2023

பாதியில் நின்று போன ராஷ்மிகாவின் திருமணம்... காரணம் இன்னொரு ஆணுடன் காட்டிய நெருக்கமா...!

Prema / 11 months ago

Advertisement

Listen News!

இந்தியத் திரையுலகில் பிரபலமான நடிகைகளில் ஒருவராகத் திகழ்ந்து வருபவர் நடிகை ராஷ்மிகா மந்தனா. அந்தவகையில் இவர் நடிப்பில் தற்போது 'வாரிசு' திரைப்படம் உருவாகியுள்ளது. வருகிற பொங்கலுக்கு வெளியாகவிருக்கும் இப்படத்தை எதிர்பார்த்து காத்துகொண்டு இருக்கிறார்கள் தளபதி ரசிகர்கள்.


தமிழில் மட்டுமன்றி தெலுங்கு மற்றும் இந்தியிலும் பிஸியான நடிகைகளில் ஒருவராக இருக்கும் ராஷ்மிகா சமீபத்தில் தென்னிந்திய பாடல்களையும், இந்தி பாடல்களையும் ஒப்பிட்டு பேசி சர்ச்சைகளில் சிக்கி இருந்தமை குறிப்பிடத்தக்கது.


இருப்பினும் இவர் முதன் முதலில் கன்னட திரையுலகில் தான் ஹீரோயினாக அறிமுகமானார். இதன்பின் தான் தெலுங்கில் கீதா கோவிந்தம் படத்தின் மூலம் ரசிகர்கள் பலரின் மனதில் இடம்பிடித்தார். மேலும் ரஷ்மிகா கன்னட திரையுலகில் நடித்து வந்த நேரத்தில் பிரபல நடிகர் ரக்ஷித் ஷெட்டி என்பவரை காதலித்து திருமணம் வரை சென்றார். ஆனால் திடீரென இந்த திருமணம் பாதியில் நின்று போய்விட்டது.


இதற்கு காரணம் நடிகர் விஜய் தேவரகொண்டாவுடன் ராஷ்மிகாவிற்கு ஏற்பட்ட காதல் நெருக்கம் தான் என்று கூறப்படுகிறது. ஆனால், இவை யாவும் இன்னமும் நிரூபிக்கப்படவில்லை. ஆனால், விஜய் தேவர்கொண்டாவை அவ்வப்போது தனிமையில் ராஷ்மிகா சந்தித்து வருவதாகவும் கூறப்படுகின்றது.


Advertisement

Advertisement

Advertisement