• Feb 01 2023

உன் வாழ்க்கை உன் கையில்... கையசைத்து நேரில் ரசிகர்களுக்கு வாழ்த்து சொன்ன ரஜினிகாந்த்... வைரலாகும் புகைப்படங்கள்..!

Listen News!
Prema / 1 month ago
image

Advertisement

Listen News!

பிறந்துள்ள ஆங்கில புத்தாண்டு தினத்தை முன்னிட்டு பலரும் தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்த வண்ணம் தான் இருக்கின்றனர்.

அந்தவகையில் இரவு 12 மணி முதலே மக்கள் ஆங்கில புத்தாண்டை பட்டாசு வெடித்து, ஆட்டம் - பாட்டத்தோடு வரவேற்ற நிலையில், காலை முதல் கோவில்களுக்கு சென்று இனிப்புகள் வழங்கி உற்சாகமாக பலரும் கொண்டாடி வருகின்றனர்.


அதுமட்டுமல்லாது ஜாதி மத, பேதமின்றி மக்கள் அனைவரும் ஒன்று திரண்டு புத்தாண்டு வாழ்த்துக்களை பரிமாறிக் கொண்டிருக்கும் இந்த நேரத்தில்... பிரபலங்கள், அரசியல்வாதிகள், என அனைவருமே தங்களுடைய வாழ்த்துக்களை சமூக வலைதளம் மூலமாக தெரிவித்து வருகிறார்கள்.

அந்த வகையில், தமிழ் சினிமாவின் முக்கிய பிரபலமான சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தும் தனது வாழ்த்துக்களை கூறியுள்ளார். அதாவது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இரவு 12 மணிக்கே "உன் வாழ்க்கை உன் கையில் என்கிற ஹேஷ்டேக்குடன்... அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள்" என தெரிவித்துள்ளார்.


அதேபோல் புத்தாண்டு அன்று தன்னை நேரில் காண வந்த ரசிகர்களுக்கு, இன்ப அதிர்ச்சி கொடுக்கும் விதமாக வீட்டை விட்டு வெளியே வந்து ரசிகர்களை பார்த்து கையசைத்தபடி அவர்களுக்கு வாழ்த்துக்களையும், தன்னுடைய நன்றிகளையும் அவர் தெரிவித்தார். இது குறித்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement

Advertisement