• Dec 26 2024

ராஷ்மிக்கா பகிர்ந்த ஸ்ரீ வள்ளி டீஷட்! அட புஷ்பராஜ் கூட இருக்கா! ட்ரெண்டிங் போஸ்ட்..

subiththira / 2 weeks ago

Advertisement

Listen News!

தற்போது சமூக வலைதளமோ, இணையமோ எதைத் திறந்தாலும் இன்றைய ஹாட் டாபிக் புஷ்பா 2 படம்.   படம் பெரும்பான்மையான ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. சில ரசிகர்கள் படத்திற்கு ஆவரேஜ் மார்க் போட்டாலும், படத்தின் வசூலையோ, வெற்றியையோ பாதிக்கும் அளவிற்கு நெகடிவ் விமர்சனம் வரவில்லை. 


ரசிகர்களின் மாபெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் இயக்குனர் சுகுமார் இயக்கத்தில் தெலுங்கின் முன்னணி நடிகர் அல்லு அர்ஜுன் ,நடிகை ராஷ்மிகா மந்தனா,நடிகர் பகத் பாசில் நடித்துள்ள இந்த திரைப்படம் தெலுங்கு, இந்தி உள்ளிட்ட பல மொழிகளில் சுமார் 12 ஆயிரத்திற்கும் அதிகமான திரையரங்குகளில் வெளியாகி உள்ளது. 


இந்நிலையில் இந்த திரைப்படத்தில் ஸ்ரீ வள்ளி கதாபாத்திரத்தில் நடித்துள்ள நடிகை ராஷ்மிக்கா மந்தனா தனது நடிப்பு, ஆடல் என்பனவற்றால் ரசிகர்களை தன்வசம் இழுத்துள்ளார். இன்று திரைப்படம் ரிலீசாகி உள்ள நிலையில் சமூகவலைத்தள பக்கத்தில் புஷ்பா ஷூட்டிங் தருணத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை ஷேர் செய்துள்ளார். 


அது தற்போது வைரலாகி வரும் நிலையில் நடிகர் அல்லு அர்ஜூன் புஷ்பராஜ் என்று எழுதப்பட்டுள்ள டீஷட் போட்டுள்ளார். அவருக்கு அருகில் நடிகை ராஷ்மிக்கா ஸ்ரீ வள்ளி என்று எழுதப்பட்டுள்ள டீஷட் போட்டுள்ளார். இந்த அழகிய புகைப்படத்தினை ஷேர் செய்துள்ளார். இதோ அந்த புகைப்படம்.

Advertisement

Advertisement