நடிகை ராஷ்மிகா மந்தனா நடிப்பில் இறுதியாக புஷ்பா 2 வெளியாகி இருக்கிறது. அதனை ரசிகர்கள் பிரமாண்டமாக கொண்டாடி வருகிறார்கள். மேலும் அடுத்து அடுத்து பல படங்களில் நடித்து வருகிறார். தென்னிந்தியாவை தாண்டி ஹிந்தியிலும் முக்கிய நடிகையாக மாறி இருக்கிறார்.
அவர் நடித்த படங்கள் பல்வேறு விமர்சனங்களை தாண்டி பெரிய வசூலை குவித்து வருகிறது. இந்நிலையில் இவர் விஜய் தேவர்க்கொண்டவுடன் தெலுங்கு ஹீரோ விஜய் தேவரகொண்டா உடன் காதலில் இருப்பதாக கூறப்பட்டு வரும் நிலையில்.
லீக்கான புகைப்படங்கள், செய்திகள் இவர்கள் காதலிக்கின்றனர் என்பதை உறுதிப்படுத்தியுள்ளது. அவர்கள் அந்த செய்தியை இதுவரை மறுக்கவும் இல்லை, ஒப்புக்கொள்ளவும் இல்லை. இருப்பினும் அவர்கள் ஜோடியாக வெளிநாடுகளுக்கு ட்ரிப் சென்று வருகின்றனர்.
இருவரும் இணைந்து கீதா கோவிந்தம், டியர் காம்ரேட் ஆகிய திரைப்படங்களில் நடித்து பிரபலமாக்கினார்கள். இந்த திரைப்படங்கள் ரசிகர்களுக்கும் பிடித்த படமாகிவிட்டது. இந்நிலையில் இந்த ஜோடி மீண்டும் இணைய உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
அதாவது விஜய் தேவர்கொண்டாவின் 14 வது படத்தில் ராஷ்மிக்கா இணைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன் படத்தின் படப்பிடிப்பு ஜனவரி மாதம் முதல் தொடங்கும் என கூறப்படுகிறது. இந்த செய்தி இவர்களின் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை தந்துள்ளது.
Listen News!