• Jul 04 2024

அஜித் போலவே பெட்டியுடன் கிளம்பிய ராஷ்மிகா மந்தனா.. வைரலாகும் தனுஷ் படத்தின் போஸ்டர்..!

Sivalingam / 2 days ago

Advertisement

Listen News!

நடிகர் அஜித் நடித்து வரும் ’விடாமுயற்சி’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியான நிலையில் இந்த போஸ்டரில் அஜித் கையில் ஒரு பேக் வைத்துக்கொண்டு சாலை நடுவே சென்று கொண்டிருப்பது போன்று இருந்தது என்பதும் இந்த போஸ்டர் பாரதி கண்ணம்மா நடிகையுடன் ஒப்பிடப்பட்டு மீம்ஸ்கள் பதிவானது என்பதையும் ஏற்கனவே பார்த்தோம்.

இந்நிலையில் அஜித்தின் போஸ்டர் ஏற்படுத்திய பரபரப்பே இன்னும் முடிவுக்கு வராத நிலையில் தற்போது திடீரென ராஷ்மிகா மந்தனா கையில் ஒரு சூட்கேஸை வைத்துக்கொண்டு காட்டுப்பகுதியில் சென்று கொண்டிருப்பது போன்ற போஸ்டர் வெளியாகி இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

தனுஷ் நடித்து வரும் ’குபேரா’ படத்தின் நாயகியான ராஷ்மிகா மந்தனாவின் கேரக்டர் வீடியோ வரும் ஜூலை 5ஆம் தேதி வெளியாகும் என்ற அறிவிப்புடன் இந்த போஸ்டர் வெளியாகி உள்ள நிலையில் இந்த போஸ்டருக்கு இணையத்தில் வரவேற்பு கிடைத்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

தனுஷ், நாகார்ஜுனா, ராஷ்மிகா மந்தனா உள்பட பலர் நடிப்பில் உருவாகி வரும் ’குபேரா’ படத்தை சேகர் கம்முலா இயக்கி வருகிறார் என்பதும் தேவி ஸ்ரீ பிரசாத் இந்த படத்திற்கு இசையமைத்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த படத்தின் படப்பிடிப்பு இறுதி கட்டத்தில் உள்ளதாகவும் இன்னும் ஒரு சில வாரங்களில் இந்த படப்பிடிப்பு முழுமையாக முடிந்துவிடும் என்றும் அதன் பிறகு தொழில்நுட்ப பணிகள் விறுவிறுப்பாக நடந்து இந்த ஆண்டு இறுதியில் இந்த படத்தை வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.


Advertisement

Advertisement