• Feb 27 2026

ராப் பாடகர் வேடனுக்கு காதல் திருமணம்..!! பொண்ணு யாரு தெரியுமா?

Aathira / 2 days ago

Advertisement

Listen News!

சாதாரணமாக ராப் பாடல்களை எழுதி, பாடி, யூடியூபில் பதிவிட்டு இந்திய அளவில் பெரிய ரசிகர் கூட்டத்தை உருவாக்கியவர் பிரபல ராப் பாடகர் வேடன். இவருடைய தனித்துவமான வரிகள், சமூக கருத்துகள் கலந்த பாடல்கள் மூலம் இளைஞர்களிடையே குறுகிய காலத்திலேயே தனக்கென ஒரு அடையாளத்தை உருவாக்கியுள்ளார்.

கடந்த ஆண்டு மலையாளத்தில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்ற ‘மஞ்சுமெல் பாய்ஸ்’ திரைப்படத்தில் இடம்பெற்ற ‘குத்தந்திரம்’ பாடல் மூலம், வேடன் திரையுலக ரசிகர்களிடமும் கவனம் பெற்றார். 

இந்தப் பாடல் அவரின் புகழை மேலும் உயர்த்தியது. இதனைத் தொடர்ந்து, சமீபத்தில் வெளியான ‘நரிவேட்டை’ படத்திலும், இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளியான ‘பைசன்’ திரைப்படத்திலும் அவர் பாடிய பாடல்கள் நல்ல வரவேற்பைப் பெற்றன.

திரைப்படங்களோடு மட்டுமல்லாமல், வெளிநாடுகளிலும் தொடர்ந்து இசை நிகழ்ச்சிகள் நடத்தி வரும் வேடன், இப்போது திருமண வாழ்க்கையில் அடியெடுத்து வைக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 


அதன்படி, அவரது நீண்ட நாள் காதலியும், எழுத்தாளருமான நவமி லதாவை, வரும் பிப்ரவரி 24-ஆம் தேதி திருச்சூரில் திருமணம் செய்து கொள்ள இருப்பதாக கூறப்படுகிறது.

இந்த தகவல் வெளியானதிலிருந்து, சமூக வலைதளங்களில் ரசிகர்கள் மற்றும் திரையுலக பிரபலங்கள் பலரும் வேடனுக்கு வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.  

Advertisement

Advertisement