சிறகடிக்க ஆசை சீரியலின் இன்றைய எபிசோட்டில், விஜயாவின் வீட்டிற்கு ஒரு சாமியார் வருகிறார். அவர் மனோஜின் வாழ்க்கை பற்றியும், மீனாவை இரண்டாவது தடவையாக இந்த வீட்டிற்கு கொண்டு வந்ததே மிகப்பெரிய சாபக்கேடு என்றும் கூறுகிறார்.
மேலும், இந்த வீட்டில் மீனா இருந்தால் விஜயாவின் தாலிக்கு பேராபத்து ஏற்படும் எனச் சொல்லி அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்துகிறார்.
சாமியாரின் பேச்சை விஜயா முழுமையாக நம்பிவிடுகிறார். இதைக் கேட்டு மீனா உடைந்து அழுது புலம்புகிறார். ஒரு கட்டத்தில், சாமியாரின் பேச்சை பொறுமையாக கேட்டுக்கொண்டிருந்த முத்து, இறுதியில் கோபம் கொண்டு அவரை அடித்து வீட்டைவிட்டு விரட்டுகிறார்.
அதன்பிறகு, அந்த சாமியார் நடந்த அனைத்தையும் சிந்தாமணியிடம் சொல்லுகிறார். சிந்தாமணி அவருக்கு பணம் கொடுத்து அனுப்பி வைக்கிறார். மேலும், “விஜயா நீ சொன்னதை நம்பிவிட்டாளா? அப்படியானால் இதை உண்மையாக்க இன்னொரு ஐடியா பண்ணலாம்” என்று திட்டம் போடுகிறார்.

இதற்கிடையில், மீனா விஜயாவுக்கு காபி கொண்டு போய் கொடுக்கும்போது, விஜயாவுக்கு சாமியார் சொன்ன வார்த்தைகளே நினைவுக்கு வருகிறது.
இதனால், உன் முகத்தைப் பார்த்தாலே அந்தப் பேச்சு தான் நினைவுக்கு வருகிறது. நீ இந்த வீட்டில் இருக்கக் கூடாது என்று விஜயா உறுதியாகச் சொல்லிவிடுகிறார். இதனால், மீனா என்ன செய்வதென்று தெரியாமல் அழுது புலம்புகிறார். இதுதான் இன்றைய எபிசோட்.
Listen News!