• Mar 20 2026

யாரையும் காலி பண்ண வரல... என்னை விட்டிடுங்க.! சிவகார்த்திகேயனின் மனம் திறந்த பேச்சு வைரல்

shali / 3 weeks ago

Advertisement

Listen News!

சமீபத்திய ஒரு நேர்காணலில் நடிகர் சிவகார்த்திகேயன் பகிர்ந்த மனம்தொடும் கருத்துக்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன. தன்னுடைய பயணம், எதிர்கால இலக்கு மற்றும் சினிமாவைப் பற்றிய பார்வையை வெளிப்படையாக பகிர்ந்த அவர் கூறிய வார்த்தைகள் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளன.

அதாவது, “ஏதாவது நல்லது பண்ணிடனும்னு ஒரு கனவோட தான் ஓடிட்டு இருக்கோம். நான் எல்லார் கிட்டயும் கேக்கிறது ஒன்னு தான். இவ்வளவு பேருக்கு கிடைக்காத வாய்ப்பு எனக்கு கிடைச்சு இருக்கு, நான் ஒரு ஆசையோட வந்திருக்கேன். 


இந்த வாழ்க்கையை அர்த்தமுள்ளதா ஆக்கிக்கணும்னு ஆசைப்படுறேன். சினிமாவில் யாருக்கும் போட்டியாகவோ, யாரையும் தாண்டி செல்லவோ, யாரையும் காலி பண்ணவோ, அட்டாக் பண்ணவோ நான் வரவில்லை. எனக்கு கிடைச்ச வாய்ப்பை நல்ல முறையில பயன்படுத்திக்கணும்னு நினைக்கிறேன். என்ன இப்படியே விட்டுருங்க..” என்று அவர் உருக்கமாக தெரிவித்தார்.

தமிழ் சினிமாவில் தற்போது கடுமையான போட்டி நிலவி வரும் சூழலில், இப்படியான மனப்பாங்கு கொண்ட கருத்தை பகிர்ந்தது பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. சாதாரண பின்னணியில் இருந்து தொலைக்காட்சி தொகுப்பாளராகத் தொடங்கி, பின்னர் வெற்றிகரமான நடிகராக உயர்ந்தவர் சிவகார்த்திகேயன்.

அவரின் இந்தப் பயணம் பல இளைஞர்களுக்கு ஒரு உந்துசக்தியாக உள்ளது. இந்நிலையில், சிவகார்த்திகேயனின் இந்த கருத்துகள் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளன. 

Advertisement

Advertisement