• Sep 20 2024

தமன்னாவுக்கே டஃப் கொடுத்த ரம்யா கிருஷ்ணன்- காவாலயா பாடலுக்கு வேற லெவலில் டான்ஸ் ஆயிருக்கிறாரே - ட்ரெண்டாகும் வீடியோ

stella / 1 year ago

Advertisement

Listen News!

நெல்சன் திலீப்குமார் இயக்கியிருக்கும் ஜெயிலர் திரைப்படத்தில் மோகன் லால், சுனில், சிவராஜ்குமார், ஜாக்கி ஷெராஃப், ரம்யா கிருஷ்ணன், தமன்னா, யோகிபாபு உள்ளிட்டோர் நடித்திருக்கின்றனர். சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் அனிருத் இசையமைத்திருக்கும் இந்தப் படம் பான் இந்தியா படமாக ஆகஸ்ட் 10ஆம் தேதி வெளியாகவுள்ளது. 

படத்திலிருந்து முதலில் காவாலா என்ற பாடல் வெளியானது. பாடலை அருண்ராஜா காமராஜா எழுதியிருந்தார். தெலுங்கில் ஆரம்பித்து தமிழில் செல்லும்படி வரிகள் அமைந்திருந்தன. பாடல் கொண்டாடப்பட்டாலும் அதில் ஒட்டுமொத்தமாக ஸ்கோர் செய்தது தமன்னாதான். இதில் இவரது டான்ஸ் ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்தது.


இதனை அடுத்து இரண்டு பாடல்கள் வெளியாகி அவையும் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்திருந்தது. இப்படத்தில் ரஜினிகாந்த் முத்துவேல் பாண்டியன் என்ற கதாபாத்திரத்தை ஏற்றிருக்கிறார். மேலும் படம் ஆக்‌ஷன் படமாக உருவானாலும் நெல்சன் ஸ்டைல் டார்க் காமெடி இதிலும் இருக்கும் என கூறப்படுகிறது.

மேலும் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்றைய தினம் பிரமாண்டமாக நடைபெற்றது. இதில் படக்குழுவினர் கலந்து கொண்டு சிறப்பித்திருந்தனர். இந்த நிலையில் இப்படத்தில் இடம் பெற்றுள்ள காவாலயா பாடலுக்கு நடிகை ரம்யா கிருஷ்ணன் டான்ஸ் ஆடியுள்ளார். இந்த வீடியோ தற்பொழுது வைரலாகி வருவதைக் காணலாம்.


Advertisement

Advertisement