• May 19 2024

சமந்தாவிற்கு போட்டியாக களமிறங்கிய பிரபல இளம் நடிகை- புஷ்பா 2 படத்தில் டான்ஸ் ஆடப் போறது இவர் தானா?

stella / 9 months ago

Advertisement

Listen News!

தென்னிந்திய சினிமாவில் டாப் நடிகையாக திகழ்ந்து தற்போது பாலிவுட் சினிமா வரை சென்று கொடிக்கட்டி பறந்து வருபவர் நடிகை சமந்தா. நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டு 4 வருடத்திலேயே கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து பெற்று பிரிந்தார்.

அதன்பின் படங்களின் கவனம் செலுத்தி இதுவரை இல்லாத அளவிற்கு கிளாமர் உச்சக்கட்டம் காட்டி நடிக்க ஆரம்பித்தார். பின் மயோசிடிஸ் என்ற தசை சம்பந்தமான அரிய வகை நோயால் பாதிக்கப்பட்டு கஷ்டப்பட்டும் வந்தார்.


பல மாதங்களாக அதற்கு சிகிச்சை மேற்கொண்டும் படங்களில் இதற்கிடையில் நடித்தும் வந்தார். இதற்காக சில காலம் சிகிச்சை மேற்கொண்டு ஓய்வெடுக்கவுள்ளார் என்ற தகவல் வெளியானது. தற்போது தோழிகளுடன் இந்தோனேசியாவிற்கு சென்று ஆன்மீக பயணத்துடன் உல்லாசமாக இருந்து வருகிறார்.

இவர் கடந்த 2021ம் ஆண்டு அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளியாகியிருந்த புஷ்பா படத்தில் இடம் பெற்ற ஊ சொல்லுறியா பாடலுக்கு நடனமாடியிருந்தார். இதனால் புஷ்பா 2 படத்திலும் அதே போல் பாடலுக்கு சமந்தா நடனமாடுவார் என ரசிகர்களால் எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால், அது நடக்கப்போவதில்லை என தகவல் ஏற்கனவே வெளிவந்தது. அவருக்கு பதிலாக வேறொரு நடிகை நடனம் ஆடுவார் என கூறப்பட்டது.பல பாலிவுட் நடிகைகளின் பெயர் இதில் அடிபட்ட நிலையில், தற்போது சமந்தாவின் இடத்தை தெலுங்கு திரையுலகின் இளம் சென்சேஷன் ஹீரோயின் ஸ்ரீ லீலா பிடித்துள்ளார் என தெரியவந்துள்ளது.


புஷ்பா 2 படத்தில் இடம்பெறும் ஸ்பெஷல் பாடலுக்கு சமந்தாவிற்கு பதிலாக இளம் நடிகை ஸ்ரீ லீலா நடனம் ஆட போகிறார் என தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் நம்பப்படுகின்றது.



















Advertisement

Advertisement