விஷால் பிரபல தயாரிப்பாளர் ஜி.கே ரெட்டி அவர்களின் மகன் ஆவர். விஷால் நடிகர் அர்ஜுனிடம் உதவியாளராக பனி புரிந்தார். பின்னர் "செல்லமே" என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ்த் திரை உலகில் அறிமுகமானார்.
தொடர்ந்து இவர் நடித்த சண்டக்கோழி,திமிரு போன்ற படங்கள் பெரும் வெற்றி பெற்றது. தற்போது தென்னிந்தியா நடிகர் சங்கத்தின் பொதுச்செயலாளராக இருக்கிறார் விஷால்.
ஆரம்பத்தில் இவர் நடித்த படங்கள் நல்ல ஹிட்டடித்து வந்தாலும் கடந்த சில வருடங்களாக பெரிய ஹிட் எதுவும் கொடுக்கவில்லை. இதனை அடுத்து தற்பொழுது மார்க் ஆண்டனி திரைப்படத்தில் நடித்துள்ளார். இப்படம் விரைவில் ரிலீஸாகவுள்ளது.
விஷால் கடந்த 2019ம் ஆண்டு பிரபல தொழிலதிபரின் மகளும் தெலுங்கு பட நடிகையுமான அனிஷா அல்லா ரெட்டியை காதலித்தார். இருவரும் காதலித்து வந்த நிலையில் விஷால் அனிஷாவுக்கு இருவீட்டார் சம்மதத்துடன் ஹைதராபாத்தில் பிரம்மாண்டமாக நிச்சயதார்த்தம் நடைபெற்றது.ஆனால் திருமணம் நின்றது.
இந்த நிலையில் நடிகர் விஷால் தனது செல்ல நாய்க்குட்டியின் பிறந்தநாளை கொண்டாடியுள்ளார். அந்த புகைப்படத்தை டுவிட்டரில் பகிர்ந்து தனது மகன் என குறிப்பிட்டுள்ளார். இந்தப் புகைப்படம் ரசிகர்களிடம் வைரலாகி வருவதைக் காணலாம்.
Listen News!