• Sep 07 2024

’இந்தியன் 2’ நடிகையின் சகோதரர் கைது.. சிறையில் அடைத்த போலீஸ்.. இவ்வளவு பெரிய குற்றமா?

Sivalingam / 1 month ago

Advertisement

Listen News!

சமீபத்தில் வெளியான ’இந்தியன் 2 ’ திரைப்படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்த நடிகையின் சகோதரர் திடீரென கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கமல்ஹாசன் நடிப்பில், ஷங்கர் இயக்கத்தில் உருவான ’இந்தியன் 2’ திரைப்படத்தில் முக்கிய வேடத்தில் நடித்தவர் நடிகை ரகுல் ப்ரீத் சிங். இவர் தெலுங்கு திரையுலகில் பிரபல நடிகையாக உள்ளார் என்பது தெரிந்தது.

இந்நிலையில் இவருடைய சகோதரர் அமன் பிரீத் சிங் திடீரென கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் சட்டவிரோத பொருள் வாங்கி பயன்படுத்தியதாகவும் கூறப்படுகிறது.

கடந்த சில ஆண்டுகளாகவே தெலுங்கு திரையுலகில் சட்டவிரோத பொருட்களை சில நடிகர், நடிகைகள் பயன்படுத்துவதாக குற்றச்சாட்டு இருந்து வருகிறது. குறிப்பாக ரகுல் ப்ரீத் சிங் உள்பட பலர் மீது சட்டவிரோத பொருள் வழக்கு தொடரப்பட்டு விசாரணை நடந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.



இந்த நிலையில் அமன் ப்ரீத் சிங் சட்டவிரோத பொருள் தடுப்பு  பிரிவு போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். அவருடன் சேர்ந்து மொத்தம் ஐந்து பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் இவர்கள் நைஜீரியடர்களிdஅம் இருந்து சட்டவிரோத பொருள் வாங்கி பயன்படுத்தியதாக முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.

மேலும் 5 பேர்களிடம் இருந்து 2 கோடி ரூபாய் மதிப்புள்ள சட்டவிரோத பொருள் கைப்பற்றப்பட்டதாகவும் தகவல் வெளியாகி உள்ளன. ரகுல் ப்ரீத் சிங் சகோதரர்  சட்டவிரோத   பொருள் வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள சம்பவம் தெலுங்கு திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Advertisement

Advertisement