• Jan 16 2026

பிக் பாஸ் ஃபினாலே வரை காத்திருந்து தினேஷின் முகத்திரையை கிழித்த ரட்சிதா! திட்டித்தீர்க்கும் ரசிகர்கள்

Aathira / 2 years ago

Advertisement

Listen News!

'பிரிவோம் சந்திப்போம்' என்ற தொடரின் மூலம் அறிமுகமானவர் தான்  நடிகை ரச்சிதா. அதே தொடரில் அவருக்கு ஜோடியாக நடித்த தினேஷ் என்பவரை காதலித்து திருமணமும் செய்துகொண்டார். 

எனினும், இருவருக்கும் இடையில் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் இருவரும் தற்போது பிரிந்துள்ளனர். ஆனால் இன்னும் சட்டப்பூர்வமாக விவாகரத்து ஆகவில்லை.

அதேவேளை, விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் சீசன் 7இல் வைல்ட் கார்டு என்ட்ரி மூலம் வீட்டிற்குள் நுழைந்துள்ளார் தினேஷ். இப்போது தினேஷும் இந்த சீசனில் ஒரு ஃபைனலிஸ்ட் போட்டியாளராக வெற்றிப் பெற்றிருக்கிறார்.


இந்த நிலையில், தினேஷ் எவிக்ட் ஆகி வெளியேறுவார் என்று தகவல் கசிந்துள்ளதோடு, தினேஷ் தொடர்பில் ரட்சித்தாவும் அதிர்ச்சி தகவலொன்றை பகிர்ந்துள்ளார்.

அதன்படி, தற்போது  பைனல் வரை முன்னேறிச் சென்ற தினேஷை பற்றி, ரசிகர்கள் நல்ல விதமாக புரிந்து கொண்டிருக்கும் இந்த நிலையில், ரட்சிதா திடீரென ஒரு பதிவை தன் சமூக வலைதளத்தில் பதிவிட்டிருக்கிறார். 


அதாவது,  ஒரு புத்தகத்தை மேற்கோள் காட்டி இதில் உள்ளதை போலத்தான் என் வாழ்க்கையிலும் நடந்தது என கூறியிருக்கிறார். கதவுக்கு வெளியே தன்னை நல்லவனாக காட்டிக் கொள்பவரை கதவை சாத்திக் கொண்டு பார்த்தால்தான் அவரது உண்மையான முகம் தெரியும். அவர் ஒரு கல்ப்ரிட். பொய்யையே பேசுபவர். சுய நலம் பிடித்தவர் என அந்த புத்தக்கத்தில் ஒருவரை பற்றி பதிவிட்டிருப்பதை சுட்டிக் காட்டி இதே போல்தான் தினேஷும் என்பது போல் கூறியிருக்கிறார்.

ஆனால் இது நாள் வரை தினேஷை பற்றி கூறாத ரட்சிதா ஃபினாலே நெருங்கும் போது இந்த மாதிரி பதிவை போட்டிருப்பது அவருடைய வெற்றிக்கும் தடையாக இருக்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement