• Feb 23 2025

தினேஷின் பெயர் பதித்த டாட்டூவை அழித்த ரட்சிதா..! அடுத்த கட்டம் விவாகரத்தா? ரசிகர்களுக்கு அதிர்ச்சி

Aathira / 1 year ago

Advertisement

Listen News!

சமீபகாலமாக சின்னத்திரையில் நடித்து வரும் ரசிகர்களுக்கென்று தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. அந்த வகையில் விஜய்டிவியில் ஒளிபரப்பாகிய சரவணன் மீனாட்சி நிகழ்ச்சியில் கதாநாயகியாக நடித்து பிரபல்யமானவர் ரச்சிதா.

இதன் மூலம் பிரபலமான இன்னும் பல சீரியல்களில் நடித்து வந்த இவர் பிரபல சீரியல் நடிகர் தினேஷ் என்பவரைக் கடந்த 2015ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.

திருமணத்திற்கு பின் சந்தோஷமாக வாழ்ந்து வந்த இருவரும் இடையே ஏற்பட்ட சில பிரச்சனையின் காரணமாக, இருவரும் தற்போது தனித்தனி வீட்டில் வாழ்ந்து வருவதாக ஏற்கனவே சர்ச்சை ஒன்று எழுந்தது.


இதை தொடர்ந்து பிக் பாஸ் சீசன் 7 இல் வைல்ட் கார்ட் என்ட்ரி மூலம், தினேஷ் போட்டியாளராக கலந்து கொண்டார். எனினும், ரட்சிதா மீண்டும் அவருடன் இணைவதாக இல்லை.


இந்த நிலையில், தினேஷின் பெயரை தன் கையில் பச்சை குத்தி இருந்த ரட்சிதா, அந்த டேட்டூவை மறைத்து அதன்மேல் வேறொரு டாட்டூவை மறைத்து  பதிந்திருக்கிறார்.

இதன் மூலம் தினேஷ் உடன் இனிமேல் வாழப்போவதில்லை என்று மறைமுகமாக ரட்சிதா கூறியுள்ளார் எனவும்,  அடுத்த கட்டமாக விவாகரத்து முடிவில் இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.


Advertisement

Advertisement