• Mar 13 2026

துயரங்களைக் கடந்து மீண்டும் புதிதாய் மலர்ந்த ரச்சிதா.. வைரலாகும் புகைப்படங்கள் இதோ..!

Aathira / 2 years ago

Advertisement

Listen News!

'பிரிவோம் சந்திப்போம்' என்ற தொடரின் மூலம் அறிமுகமானவர் தான்  நடிகை ரச்சிதா. அதே தொடரில் அவருக்கு ஜோடியாக நடித்த தினேஷ் என்பவரை காதலித்து திருமணமும் செய்துகொண்டார். 

எனினும், இருவருக்கும் இடையில் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் இருவரும் தற்போது பிரிந்துள்ளனர். ஆனால் இன்னும் சட்டப்பூர்வமாக விவாகரத்து ஆகவில்லை.


விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் சீசன் 7இல் வைல்ட் கார்டு என்ட்ரி மூலம் வீட்டிற்குள் நுழைந்துள்ளார் தினேஷ். தற்போது வரையில் பிக் பாஸ்  வீட்டில் வெற்றிகரமாக விளையாடி வருகிறார்.

பிக் பாஸ் வீட்டில் தினேஷ் - விசித்ரா சண்டை நடுவே, ரட்சித்தாவையும் இழுத்து கதைத்து சர்ச்சையை கிளப்பி இருந்தார் விசித்ரா.

இதை தொடர்ந்து, விசித்ராவுக்கு பதிலடி கொடுக்கும் வகையில். மனம் நொந்து அழுதவாறே நேற்றைய தினம் வீடியோ வெளியிட்டார் ரச்சிதா.

இந்த நிலையில், இன்றைய தினம் கொண்டாடப்படும் புதுவருடத்தை புதிதாக வரவேற்றுள்ளார் ரச்சிதா மகாலக்சுமி. தற்போது, அவர் வெளியிட்ட புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.




Advertisement

Advertisement