• Apr 17 2025

பிறந்தநாள் கொண்டாடும் புஷ்பா நாயகன் அல்லுஅர்ஜுன்...!கோடிக் கணக்கிலுள்ள சொத்துமதிப்பு..!

subiththira / 1 week ago

Advertisement

Listen News!

தெலுங்கு சினிமாவை இந்திய அளவில் உயர்த்திய நடிகர்களில் முக்கியமானவர் அல்லு அர்ஜூன். தனது அழகிய நடிப்பு , ஸ்டைலிஷான தோற்றம் மற்றும் சிறப்பான நடனத் திறமை என்பன மூலம் ரசிகர்களின் இதயத்தில் நிரந்தரமான இடத்தைப் பதிய வைத்துள்ளார்.

2021ம் ஆண்டு வெளியான ‘புஷ்பா’ திரைப்படம், அவரது திரையுலக வாழ்க்கையில் மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்திருந்தது. அந்தப் படம் அல்லு அர்ஜூனை பன்மொழி ரசிகர்களிடையே கொண்டாடப்படும் நடிகராக மாற்றியது.


'புஷ்பா' படத்தின் இரண்டாம் பாகமான ‘புஷ்பா 2’ தற்போது திரையுலகில் அதிகளவான எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள படம். சுகுமார் இயக்கத்தில் உருவான இப்படத்தில், புஷ்பா ராஜ் என்ற கதாபாத்திரம் மிகவும் வலிமையாகவும் ஆழமாகவும் எழுதப்பட்டிருந்தது. தற்பொழுது அத்தகைய அல்லு அர்ஜூனுக்கு 300 கோடி சம்பளம் வழங்கப்படுவதாகக் கூறப்படுகின்றது. இது தென்னிந்திய திரையுலகில் மிகப்பெரிய சம்பளமாகும்.

இந்த தொகை, அவர் தற்போது இந்தியாவின் மிகுந்த சம்பளம் வாங்கும் நடிகர்களில் ஒருவராக உயர்த்தியுள்ளது. இதன்மூலம் தெலுங்கு சினிமா மக்கள் அனைவரது கவனத்தையும் ஈர்த்த நடிகராகவும் மாற்றம் பெற்றுக் கொண்டார்.

அல்லு அர்ஜூன் இன்று தனது 43வது பிறந்த நாளை கொண்டாடி வருகின்றார். இதனையொட்டி, அவரது சொத்து மதிப்பின் விரங்கள் வெளியாகியுள்ளது. சமீபத்திய தகவல்களின் படி, அவரது சொத்து மதிப்பு 450 கோடி வரை சென்றுவிட்டதாக கூறப்படுகின்றது.

Advertisement

Advertisement