இந்தி சினிமா உலகத்தில் சூப்பர் ஸ்டாராக திகழ்கின்றார் ஷாருக்கான். இவர் 2002ம் ஆண்டு வெளியான 'தேவதாஸ்' படம் மூலம் மிகப்பெரிய நடிகராக மக்கள் மனங்களில் இடம்பிடித்தார். இப்படம், விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் பெரிய வெற்றியை பெற்றது.
அதன்பிறகு, கடந்த 2023ம் ஆண்டு ஷாருக்கானின் நடிப்பில் வெளியாகிய 'பதான்' மற்றும் 'ஜவான்' ஆகிய படங்கள் ரசிகர்களிடையே அபார வரவேற்பைப் பெற்றன. இதனாலேயே, ஷாருக்கானின் மாஸ் என்றி என 2023ம் ஆண்டை ரசிகர்கள் கொண்டாடினார்கள்.
தற்போது, ஷாருக்கான், 'கிங்' என்ற புதிய படத்தில் நடித்து வருகின்றார். இந்த படத்தின் சிறப்பம்சம் என்னவென்றால், இதில் அவரது மகள் சுஹானா கான் முதன்முறையாக அவரது மகளாக இத்திரைபடத்தில் நடிக்கின்றார் என்பதுதான்.
'கிங்' படத்தை, 'பதான்' மற்றும் 'வார்' போன்ற ஹிட் படங்களை இயக்கிய சித்தார்த் ஆனந்த் இயக்கி வருகின்றார். இந்த கூட்டணிக்கு ரசிகர்கள் பெரிய எதிர்பார்ப்பில் உள்ளனர். இந்நிலையில், இப்படத்தில் சுஹானா கானின் அம்மா கதாப்பாத்திரத்தில் நடிக்க நடிகை தீபிகா படுகோனுடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகின்றது எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
தீபிகா படுகோன் ஏற்கனவே ஷாருக்கானுடன் 'ஓம் சாந்தி ஓம்' மற்றும் 'சென்னை எக்ஸ்பிரஸ்' உள்ளிட்ட பல வெற்றிப் படங்களில் இணைந்து நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், 'கிங்' படம் ஒரு ஆக்சன் படமாக உருவாகி மாபெரும் ஹிட் கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
Listen News!