• Jul 05 2026

மகள் - மருமகள் இடையே சொத்து சண்டையா? பாரதிராஜாவின் குடும்ப சர்ச்சைக்கு புதிய திருப்பம்

Aathira / 3 weeks ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவின் இயக்குநர் இமயம் பாரதிராஜாவின் மறைவு, திரையுலகையே சோகத்தில் ஆழ்த்தியுள்ள நிலையில், அவரது இறுதிக் கணங்கள் மற்றும் குடும்பம் தொடர்பாக சமூக வலைதளங்களில் பல்வேறு தகவல்கள் பரவி வருகின்றன.

இந்த நிலையில், பாரதிராஜா உயிரிழந்த போது அவருக்கு அருகில் நெருங்கிய குடும்பத்தினர் யாரும் இல்லை என்ற தகவலைத் தொடர்ந்து, சமூக வலைதளங்களில் பல்வேறு விவாதங்கள் எழுந்தன. குறிப்பாக, குடும்பத்தில் மகளுக்கும் மருமகளுக்கும் இடையில் சொத்து பிரச்சினை மற்றும் கருத்து வேறுபாடுகள் இருந்ததாக சில தகவல்கள் பரவி வருகின்றன.

ஆனால், இந்த தகவல்களுக்கு எந்த அதிகாரப்பூர்வ உறுதிப்படுத்தலும் இதுவரை வெளியாகவில்லை. மேலும், இறுதிச்சடங்கின் போது பாரதிராஜாவின் மகளும், மறைந்த மனோஜ் பாரதிராஜாவின் மனைவியும் ஒருவருக்கொருவர் ஆறுதல் கூறிக் கொண்டதாகவும், குடும்பத்தினருக்குள் பெரிய அளவிலான பிளவு எதுவும் இல்லை என்பதையே அந்த காட்சிகள் வெளிப்படுத்தியதாகவும் கூறப்படுகிறது.

மேலும், பாரதிராஜா தனது குடும்ப உறுப்பினர்களுக்கான பொறுப்புகளை முன்கூட்டியே திட்டமிட்டு, தேவையான ஏற்பாடுகளை செய்து வைத்திருந்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால் சமூக வலைதளங்களில் பரவி வந்த பல வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளதாக அவரது நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிப்பதாக கூறப்படுகிறது.

பாரதிராஜாவின் மறைவு ஏற்படுத்திய துயரத்துடன் சேர்ந்து, அவரது குடும்பத்தைச் சுற்றியுள்ள வதந்திகளும் பேசுபொருளாக மாறியுள்ள நிலையில், அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகும் வரை உறுதிப்படுத்தப்படாத தகவல்களை நம்ப வேண்டாம் என பலரும் வலியுறுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement