• Sep 20 2024

மாற்றுப்பாலின தம்பதி பெற்றடுத்த குழந்தைக்கு பிறப்பு சான்றிதழ் பதிவதில் சிக்கல்? வழக்கை ஒத்திவைத்த நீதிமன்றம்

Aathira / 10 months ago

Advertisement

Listen News!

கேரளாவில் மாற்றுபாலின தம்பதிக்கு பிறந்த குழந்தைக்கு பிறப்புச் சான்றிதழ் பெற முனைந்த போது அவர்களுக்கு பெற்றோர் என்ற அங்கீகரிப்பு மறுக்கப்பட்டிருக்கும் தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கேரளாவை சேர்ந்தவர் சஹத் பெண்ணாகப் பிறந்து ஆணாக மாறிய திருநம்பி. அதேபோல் ஜியோ பாவல் ஆணாகப் பிறந்து பெண்ணாக மாறிய திருநங்கை. 

இவர்கள் இருவரும் கடந்த மூன்று வருடங்களாக ஒன்றாக வாழ்ந்து வந்துள்ளனர். இருவருக்கும் குழந்தை மீது ஆசை வரவே மருத்துவரை சந்தித்துள்ளனர். இதன்போது சஹத்தின் கருப்பை உள்ளிட்ட உறுப்புகள் அகற்றப்படாததால் குழந்தை பெற்று கொள்ள முடியும் என்று மருத்துவர் கூறியுள்ளார்.


இதனையடுத்து அவருக்கு ஜியாவின் விந்தணுவை வைத்து சிகிச்சை அளித்து  இருந்த நிலையில், கடந்த பிப்ரவரி மாதம் இவர்களுக்கு குழந்தை பிறந்தது. 

இவ்வாறு பிறந்த குழந்தையை கோழிக்கோடு மாநகராட்சியில் பதிவு செய்ய சென்ற போது இருவரையும் தாய்- தந்தை என்று அடையாளப்படுத்தாமல் பெற்றோர் என அடையாளப்படுத்தும்படி கேட்டிருக்கின்றனர். 

அதற்கு மாநகராட்சி அதிகாரிகள் மறுப்பு தெரிவித்து திருநம்பி சஹத் பாசிலை தாயாகவும், திருநங்கை ஜியா பாவலை தந்தையாகவும் பதிவு செய்துள்ளனர். இந்நிலையில் இதை எதிர்த்து மாற்று பாலின தம்பதி சகத்- ஜியா இருவரும் கேரள உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்கள். 

அதன்படி மனுவில், குழந்தையின் பிறப்பு சான்றிதழில் தாய்- தந்தை என்பதற்கு பதிலாக பெற்றோர் என குறிப்பிடும்படி அவர்கள் கேட்டிருக்கின்றனர். 


இது தொடர்பாக கூறிய தம்பதியினர், 'தற்போதைய பாலினத்தின் அடிப்படையில் பிறப்புச் சான்றிதழை மாற்றி கொடுங்கள் என்று கூறவில்லை. குறைந்தபட்சம் எங்களை பெற்றோர் என்று அடையாளப்படுத்துங்கள் என்று தான் கேட்கிறோம். பெற்றோர் என்றால் தாய் தந்தை என்று இருவரையும் குறிக்கும். அதில் எந்த சிக்கலும் வரப்போவதில்லை. இதை ஏன் அரசு அங்கீகரிக்கவில்லை என்று தான் தெரியவில்லை. குழந்தையின் மீது இருந்த ஆசையால் தான் நாங்கள் குழந்தை பெற்றுக் கொள்ள முடிவு செய்தோம். தற்போது பெற்றுக் நாங்கள் நிறைய மன உளைச்சலுக்கு ஆளாகி இருக்கிறோம்' என்று கூறியிருக்கிறார். 

இதனை அடுத்து இந்த வழக்கை நீதிமன்றம் ஏற்றுக்கொண்டு  மேலும் வழக்கை ஒத்திவைத்துள்ளது. குறித்த தகவல் வெளியானதை ஸ தொடர்ந்து பலருமே ஜியா- சகத் மாற்று பாலின தம்பதிக்கு ஆதரவாக குரல் கொடுத்து வருகின்றனர்.

Advertisement

Advertisement